பாரசிட்டமால் உட்பட 49 மாத்திரைகள் தர பரிசோதனையில் தோல்வி! மக்களே உஷார்!
டெல்லி: பராசிட்டமால் உட்பட 49 மருந்துகளை பரிசோதித்தபோது, அது போதுமான தரத்தில் இல்லை என்று மத்திய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருக்கிறது. தரமற்ற மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மரணம் கூட நேரலாம் என உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது கவனிக்கத்தக்கது.
இந்தியாவில் கடந்த சமீப ஆண்டுகளாக மக்களின் வாழ்நாட்கள் அதிகரித்துள்ளது. மருத்துவ வசதிகள் அதிகரித்திருப்பதால் முதியோர்கள் ஓரளவுக்கு நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் மருந்துகளின் தரம் குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது 3000 மருந்துகளை மத்திய மருந்துகள் ஓழுங்குமுறை ஆணையம் பரிசோதித்திருந்தது. இதில் 3 மருந்துகள் போலியானவை என்றும், 49 மருந்துகள் தரமற்றவை என்றும் தெரிவித்திருக்கிறது.

இதில் லைஃப் மேக்ஸ் கேன்சர் லேபரட்டரீஸ் தயாரித்த, பரவலாகப் பயன்படுத்தப்படும் கால்சியம் சப்ளிமென்ட் Shelcal 500, combination drug Pan D, Vitamin D3, பாராசிட்டமால் என 49 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்
UrimaxD
SHELCAL 500
PAN-D
DecaDurabolin 25 Inj
Neurotem-NT
Cefuroxime Axetil Tablets IP 500 mg (JKMSCL Supply)
Loperamide Hydrochloride Tablets IP (JKMSCL Hospital Supply)
Floxages-OZ (Ofloxacin and Ornidazole Tablets IP)
Wintel 40 Tablets
Moxica -250 [Amoxicillin Dispersible Tablets IP 250 mg]
Frusemide Injection IP 20 mg
Cloxacillin Sodium Capsules IP 250 mg
Fluorometholone Eye Drops IP
Panlib 40 Tablets
B - Cidal 625
Trypsin, Bromelain & Rutoside Trihydrate Tablets [Flavoshine]
C Mont LC Kid 60 ml (Montelukast & Leveocetirizine Dihydrochloride syrup)
Yogaraja Guggulu Tablet
Telmisartan Tab IP 40 mg
Pantoprazole Inj. BP 40 mg
Glimepiride Tab IP
Cough Syrup
உள்ளிட்டவை போதுமான தரத்தை எட்டவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தமாக 3000 மருந்துகளில் 1.5% தரமற்றவை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தரமற்ற மருந்துகளை உட்கொள்ளும்போது அது சிகிச்சை தோல்வி, நோய் தீவிரமடைதல் மற்றும் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறத கவனத்தில் கொள்ளத்தக்கது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications