ஹரியானாவில் வாக்குகளை திருடிட்டாங்க.. ஒரே போட்டோவில் 1.24 லட்சம் வாக்காளர்கள்..ராகுல் காந்தி பகீர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் எங்களின் வெற்றியை ஓட்டு திருட்டு தடுத்து விட்டது. ஹரியானாவில் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே போட்டோவில் 1.24 லட்சம் பேர் உள்ளனர் என்று ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

டெல்லியில் இன்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் மீது மீண்டும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஏற்கனவே கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓட்டு திருட்டு நடந்துள்ளதாக கூறியிருந்தார்.

rahul gandhi congress

இதையடுத்து அவர் ஹரியானா மாநிலத்திலும் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: நாம் இப்போது ‛எச்' (ஹரியானா) பைலை பார்க்க இருக்கிறோம். இந்த மொத்த மாநிலத்திலும் ஓட்டு திருட்டு நடந்துள்ளது. இந்த ஓட்டு திருட்டு தொகுதி வாரியாக மட்டுமின்றி மாநிலம், நாடு முழுவதும் நடந்துள்ளதாக நாங்கள் சந்தேகித்தோம்.

ஹரியானாவில் எங்கள் வேட்பாளர்களிடம் இருந்து புகார்கள் வந்தது. இதனால் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா போல் ஹரியானாவுிலும் ஆய்வு செய்ய தொடங்கினோம். இப்போது ஓட்டு திருட்டு நடந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஹரியானாவில் காங்கிரஸ் வெல்லும் என்று கணித்தன. ஆனால் நடந்தது வேறு. ஹரியானா வரலாற்றில் முதல் முறையாக தபால் ஓட்டுகளில் வித்தியாசம் வந்துள்ளது. இது இதற்கு முன்பு நடந்தது இல்லை. இதுபற்றி ஆய்வு செய்தபோது என்னால் நம்ப முடியவில்லை. இதனால் டீமை பலமுறை பரிசோதிக்க உத்தரவிட்டேன். காங்கிரஸின் மகத்தான வெற்றியை ஓட்டு திருட்டு மூலம் தடுத்து விட்டனர்.

ஹரியானாவில் 2 பூத்களில் ஒரு வாக்காளரின் போட்டோ 223 இடங்களில் இருந்தது. மொத்தமாக பார்த்தால் ஹரியானாவில் 1,24,177 வாக்காளர்கள் ஒரே போட்டோவில் இருக்கின்றனர். ஹரியானாவில் 5,21,619 போலி வாக்காளர்கள் உள்ளனர். பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை வாக்களித்ததாக கூறப்படுகிறது'' என வெடிகுண்டை வீசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+