மன்மோகன் தாக்கல் செய்த ஒரு பட்ஜெட் இந்தியாவையே மாற்றியது எப்படி? சிதம்பரத்தின் கனவு பட்ஜெட் தெரியுமா
டெல்லி: உலகளவில் தலைநிமிரச் செய்த 5 வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்களை இந்தியா கண்டுள்ளது. அந்த பட்ஜெட்கள் நாட்டின் பொருளாதார, சமூக போக்கையே மாற்றிப்போட்டன. அப்படியான வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட்கள் எவை, அதில் என்ன சிறப்பு.. இதோ அந்த தொகுப்பை இங்கு காணலாம்.
பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு, 2024ம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு ஆர்.கே சண்முகம் செட்டி முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இதன்பிறகு சில பட்ஜெட்கள் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்துள்ளன.
இந்தியாவின் 5 முக்கிய பட்ஜெட்களில் முதலாவது பார்க்கப்போவது, 1957-58க்கான பட்ஜெட்டாகும். டி.டி. கிருஷ்ணாமாச்சாரி 1957-58 ஆண்டுக்காக தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், செல்வ வரி (Wealth Tax) உள்ளிட்ட முக்கிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரி சீர்திருத்தத்துக்கு அடித்தளமிட்டது. இந்தியாவின் வரிக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கும் வகையில், தனிநபர் சொத்துகளின் அடிப்படையில் இந்த வரி விதிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு செல்வ வரி ஒழிக்கப்படும் வரை வரி விதிப்பில் ஓர் அம்சமாக இருந்தது.
1991-92 பட்ஜெட்: நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் 1991ம் ஆண்டு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், நாடு அப்போது எதிர்கொண்ட கடும் பொருளாதார நெருக்கடிகளின் தீர்வுக்கான பாதையை உருவாக்கியது. மிகச்சிறந்த பொருளாதார நிபுணரான மன்மோகன் இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த தன் அனுபவத்திறனை பயன்படுத்தினார். திட்டக்குழுவின் தலைவராகவும், தலைமை பொருளாதார ஆலோசகராகவும் இருந்த தனது அனுபவத்தின் மூலம் இறக்குமதி - ஏற்றுமதி கொள்கையை மறுசீரமைக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். மேலும் அந்த பட்ஜெட்டில், சுங்கவரியை 220 சதவீதத்தில் இருந்து 150 சதவீதமாக குறைத்தது, இந்திய வர்த்தகத்தை உலகளவில் போட்டி போட உதவியது. அப்போதைய பிரதமர் பி.வி நரசிம்ம ராவ் அரசின் கீழ், உலகமயமாக்கல், தாராளமய கொள்கையை அறிமுகப்படுத்தியது அந்த பட்ஜெட். அரசின் கட்டுப்பாடுகளை கணிசமாக குறைத்து, பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தினார். அந்த பட்ஜெட் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த பட்ஜெட்டில் லைசென்ஸ் ராஜ் முறை நிறுத்தப்பட்டு, அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், பொருளாதார நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்ததுடன், இந்தியா மிகப்பெரிய பொருளாதார வலிமையுள்ள நாடாகவும் வழிவகுத்தது. ஆம்.. அதன்பிறகுதான் இந்திய பொருளாதாரம் 90களில் நாலு கால் பாய்ச்சலுக்கு பாயத் தொடங்கியது.. அதற்கு முன்பு வரை வானொலியை மட்டுமே கேட்டு வந்த நாம், பிளாக் அன்ட் ஒயிட் டிவி, கலர் டிவி, பல வகை கார்கள், சேட்டிலைட் சேனல்கள் என வேகமாக வளரத் தொடங்கியது 90களில்தான்..
1997-98: நரசிம்ம ராவ் அமைச்சரவையின் கீழ் பணியாற்றிய ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது 1997ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பொருளாதாரம் மற்றும் நிதியில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினார். பொருளாதார நிபுணர்களால், "கனவு பட்ஜெட்" என்றழைக்கப்பட்ட அந்த பட்ஜெட், தனிநபர் வருமானவரி, கார்ப்பரேட் வரியை குறைத்து குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக தனிநபர் வருமானவரியை 40 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைத்தது. இந்த நடவடிக்கை குறைக்கப்பட்ட ராயல்டி விகிதம் மற்றும் கூடுதல் கட்டணங்களை உள்ளடக்கியது. இது வரி செலுத்துவோருக்கான சுமையை குறைத்து, நாட்டின் சிறந்த பட்ஜெட் என்ற பாராட்டையும் பெற்றது.
2000-01: அப்போதைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கணினி உள்பட 21 பொருள்களுக்கான சுங்கவரி குறைக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இது தொழில்துறையின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்ததுடன் இந்தியாவை ஐ.டி வளர்ச்சிக்கான மையமாக மாற்றியது.
2016-17: அதற்கு முன்புவரை மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தன. அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 92 ஆண்டுகால பாரம்பரியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்முறையாக மத்திய, ரயில்வே பட்ஜெட்டை ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். நிதியமைச்சர் என்ற வகையில் அருண் ஜெட்லி இந்த செயல்முறையை நெறிப்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தினார். நாளடைவில் அது நிலையான நடைமுறையாக மாறிவிட்டது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications