Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி அமைச்சரவையில் 5 முன்னாள் 'சிஎம்'.. 27 ஓபிசி, 15 எஸ்சி/எஸ்டி, 5 சிறுபான்மையினர்.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஓபிசி அமைச்சர்கள் 27 பேர் இடம் பெற்றுள்ளனர். 11 பெண்கள் மற்றும் ஐந்து சிறுபான்மையினர் அமைச்சர்கள் ஆகி உள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடந்தது. இதில் பாஜக மட்டும் தனித்து 239 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டு முறை அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிரதமர் மோடி இந்த முறை கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

Narendra Modi ministers

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றிருந்ததால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் உரிமை கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நரேந்திர மோடிக்கு நேற்று இரவு பிரதமருக்கான பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து நரேந்திர மோடி, 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள் 5 பேர் உள்பட 71 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய அமைச்சர் சபையில் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகிய 3 பேர் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

கேபினட் அமைச்சர்கள் விவரம்:

1. ராஜ்நாத் சிங்

2. அமித்ஷா

3. நிதின் கட்கரி

4. ஜே.பி.நட்டா

5. சிவராஜ் சிங் சவுகான்

6. நிர்மலா சீதாராமன்

7. ஜெய்சங்கர்

8. மனோகர் லால் கட்டார்

9. எச்.டி.குமாரசாமி

10. பியூஷ் கோயல்

11. தர்மேந்திர பிரதான்

12. ஜித்தன் ராம் மஞ்சி

13. ராஜீவ் ரஞ்சன் சிங்

14. சர்பானந்த் சோனாவால்

15. வீரேந்திர குமார்

16. ராம் மோகன் நாயுடு

17. பிரகலாத் ஜோஷி

18. ஜூவல் ஓரம்.

19. கிரிராஜ் சிங்

20.அஷ்வினி வைஷ்ணவ்

21. ஜோதிர் ஆதித்ய சிந்தியா.

22. பூபேந்திர யாதவ்

23. கஜேந்திர சிங் செகாவத்

24. அன்னபூர்ணா தேவி

25. கிரண் ரிஜூஜூ

26. ஹர்தீப் சிங் புரி

27 மன்சுக் மாண்டவியா

28. கிஷன் ரெட்டி

29. சிராக் பாஸ்வான்

30. சி.ஆர்.பாட்டில்

மத்திய இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

1. இந்திர ஜித் சிங்

2. ஜிதேந்திர சிங்

3. அர்ஜூன் ராம் மேக்வால்

4. பிரதாப் ராவ் ஜாதவ்

5. ஜெயந்த் சாங்க்வி

மத்திய இணையமைச்சர்கள்

1. நிதின் பிரசாத்

2. ஸ்ரீபாத் நாயக்

3. பங்கஜ் சவுத்ரி

4. கிருஷ்ணன்பால்

5. ராம்தாஸ் அத்வாலே

6. ராம்நாத் தாகூர்

7. நித்யானந்த் ராய்

8. அனுப்பிரியா பட்டீல்

9. வி.சோமண்ணா

10. சந்திரசேகர பொம்மசானி

11. எஸ்.பி.சிங் பாகல்

12. ஷோபா கரந்தலாஜே

13. கீர்த்தி வர்த்தன் சிங்

14. பி.எல்.வர்மா

15. சந்தனு தாகூர்

16. சுரேஷ் கோபி

17. எல்.முருகன்

18. அஜய் தம்தா

19. சஞ்சய் குமார்

20. பாகிராம் சவுத்ரி

21. சதீஷ் சந்திர துபே

23. சஞ்சய் சேட்

24. ரவ்னீத் சிங்.

25. துர்காதாஸ் உய்கி

26. ரக்சா நிகில் கட்சே

27. சுகாந்து மஜூம்தார்

28. சாவித்திரி தாக்கூர்

29. தோஹன் சாகு

30. ராஜ்பூஷன் சவுத்திரி

31. பூபதி ராஜூஸ்ரீநிவாஸ் வர்மா

32. ஹர்ஷ் மல்ஹோத்ரா

33. நிமுபென் பாம்பனியா

34. முரளிதர் மொஹோல்

35. ஜார்ஜ் குரியன்

36. பவித்ரமார்கரீட்டா

அமைச்சராகி உள்ள மேற்கண்ட 71 பேரில் யார் யாருக்கு என்னென்ன துறைகள் என்பது இன்று தெரியவர வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அமைச்சரவையில் ஓபிசி, பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் எந்த பிரிவினருக்கு எவ்வளவு இடம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியின் கேபினட் அமைச்சர்களில் 9 பேர் புதுமுகங்கள் ஆவர். இதேபோல் இணை அமைச்சர்கள் 24 பேர் புதுமுகங்கள் ஆவர்..
இதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 27 பேருக்கும், பட்டியலினத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் 5 பேரும் அமைச்சர்களாகும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து முதல்வர்களுக்கு இடம்: மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். இதேபோல் கர்நாடகாவின் முதல்வராக 2 முறை பதவி வகித்த குமாரசாமிக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அரியானாவின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதேபோல் பீகாரில் 2014 முதல் 2015 வரை முதல்வராக பதவி வகித்த ஜிதன் ராம் மஞ்சிக்கு மோடி தலைமையிலான புதிய அமைச்சராக இணைந்துள்ளார். இதுதவிர அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சர்பானந்தா சோனோவால் கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

பாஜக சார்பில் 61 பேரும், கூட்டணிகள் சார்பில் 11 பேரும் அமைச்சர்கள் ஆகி உள்ளனர். கூட்டணி சார்பாக அமைச்சர்கள் ஆனவர்களின் விவரம்:

தெலுங்குதேசம் - 2 (கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு,

சந்திர சேகர் பெம்மசானி)

ஐக்கிய ஜனதா தளம் - 2 (ராம்நாத் தாக்குர், பி.எல்.வெர்மா)

சிவசேனா (ஷிண்டே) - 1 (பிரதாப்ராவ் ஜாதவ்)

ஜனதா தளம் (எஸ்) - 1 (எச்.டி.குமாரசாமி)

இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 1 (ஜித்தன் ராம் மஞ்சி)

இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே) - 1 (ராம்தாஸ் அத்வாலே)

லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) - 1 (சிராக் பஸ்வான்)

ராஷ்டிரீய லோக் தளம் - 1 ஜெயந்த் சவுதாரி)

அப்னா தளம் - 1 (சந்திரசேகர் சவுதாரி)

பிரதமர் நரேந்திர மோடியின் 3வது அமைச்சரவையில் மகளிர் 7 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மத்திய கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன் மற்றும் அன்னபூர்ணா தேவி ஆகியோர் இடம் பொறுப்பேற்றனர். மத்திய இணை-அமைச்சர்களாக சாவித்ரி தாக்கூர், நிமுபென் பம்பானியா, ரக்ஷா கட்சே, ஷோபா கரந்த்லாஜே, அனுப்ரியா பட்டேல் ஆகியோர் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+