மீண்டும் கோட்டை விட்ட காங்கிரஸ்...அடி மேல் அடி வாங்கும் பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : வழக்கம் போல் இந்த முறையும், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களிலும், பாரம்பரிய பெருமைமிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க தவறி விட்டது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற முக்கிய தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்தும் எதுவும் பலன் தரவில்லை.

கேரளாவை பொறுத்தவரை, வழக்கமாக 2 இடதுசாரி கட்சிகளுக்கும் மாற்றாக இருப்பது காங்கிரஸ் தான். ஆனால் இந்த முறை பினராயி விஜயன் அரசு மீதான எதிர்ப்பலையை சரியாக கையாளாமல் விட்டு விட்டது காங்கிரஸ். இத்தனைக்கும் கன்னூர் தொகுதி எம்பி.,யாக ராகுல் காந்தி இருந்தும், கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்தும் எடுபடவில்லை.

5 state assembly election : Congress fails to impress, again

அசாமில் ஆளும் பாஜக.,வை வீழ்த்த பிரம்மாண்ட கூட்டணியை அமைத்தது காங்கிரஸ். அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்தும் எதிர்பார்த்த முடிவை பெற முடியவில்லை. பாஜக.,வின் வியூகத்தை முறியடிக்க பல தெிர்க்கட்சிகளை கூட்டணியில் சேர்த்திருந்தது. இருந்தும் மக்களின் மனங்களை வென்று, ஓட்டுக்களை பெற முடியவில்லை.

புதுச்சேரியில், தேர்தல் வருவதற்கு ஒரு மாதம் முன்பு, பல எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிர்ந்தது. தற்போது மீண்டும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளனர்.

மேற்குவங்கத்தில், காங்கிரஸ் மாநில தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி முழுவீச்சில் பிரச்சாரம் செய்தும் கள நிலவரத்தை மாற்ற முடியவில்லை. அப்பாஸ் சித்திக்கின் இந்திய மதசார்பற்ற முன்னணியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது பலரும் எதிர்த்து, கேள்வி எழுப்பி வந்தனர்.

தமிழகத்தில் திமுக.,வுடன் கூட்டணி வைத்து 12 இடங்களை பெற்றது மட்டுமே தற்போதைக்கு காங்கிரசிற்கு கிடைத்துள்ள ஒரே ஆறுதல். இதே முறையை பிற மாநிலங்களிலும் கையாளலாமா என்று கூட காங்கிரஸ் யோசித்து வருகிறது. தனியாக போட்டியிட்டு மிக மோசமாக தோல்வி அடைவதை விட, பலமான மாநில கட்சியுடன் கூட்டணி வைத்து, ஓரளவிற்கு வெற்றி பெற்று இழந்தை செல்வாக்கை மீட்கலாம் என காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.

இந்த தேர்தலில் மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் சந்தித்த பல தேர்தல்களில் தொடர்ந்து பலத்த அடி வாங்கி, மிக மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்து வருவது மறுக்க முடியாதது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+