5 மாநில சட்டசபைத் தேர்தல்: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்டது பிரதமர் மோடி புகைப்படம்
டெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.
பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம்தேதி முதல் மார்ச் 7ஆம்தேதி வரை வாக்குப்பதிவு நடைபெபறும். பஞ்சாப், உத்தராகண்ட், கோவாவில் பிப்ரவரி 14ஆம் தேதியும், மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

பிரசாரத்திற்கு கட்டுப்பாடு
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளுடன் சட்டசபைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. நேரடியாக தேர்தல் பிரச்சாரம் செய்யவும் பேரணிகள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யவும், டிஜிட்டல் பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மோடி படம் நீக்கம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் சட்டசபைத்தேர்தல் நடைபெற உள்ள உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான மாற்றத்தை கோவின் தளத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் செய்யும்.

தடுப்பூசி சான்றிதழ்
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளுக்காக, கோவின் இணைய தளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது அரசால் ஏற்படுத்தப்படும் முகாம்களில் நேரடியாக சென்றும் பதிவு செய்து கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விபரங்கள் ஆதார் பதிவுடன் கோவின் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும். தடுப்பூசி செலுத்தியவர்கள், ஆதார் மற்றும் மொபைல் தொடர்பான விபரங்களை அளித்து கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்தல் ஆணையம் உத்தரவு
பி.டி.எப். ஃபார்மேட்டில் இருக்கும் இந்த சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் மற்றும் சான்றிதழுக்கான கியூ.ஆர். கோடு மற்றும் தடுப்பூசி செலுத்திய விபரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் 5 மாநில தேர்தலையொட்டி, இந்த சான்றிதழிலில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போதும் இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications