ராம் ராம் என பிரச்சாரம் செய்த யோகி.. பாஜகவிற்கு ஆதித்யநாத்தால் ஏற்பட்ட விளைவை பாருங்கள்!
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்று விவரம் வெளியாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்று விவரம் வெளியாகி உள்ளது.
ஐந்து மாநில தேர்தலை ஒட்டி பாஜக சார்பாக நான்கு மாநிலங்களில் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார்.
மொத்தம் 70 இடங்களில் யோகி பிரச்சாரம் செய்தார்.
இரண்டு மாதங்கள் இவர் மொத்தமாக பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் நட்சத்திர பிரச்சாரக்காரர் இவர்தான். மோடியைவிட இவர் அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார்.

மத்திய பிரதேசம் எப்படி
யோகி மத்திய பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 23 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இதில் 15ல் பாஜக வெற்றிபெற்று இருக்கிறது. ஆனால் பாஜக வலுவாக இருந்த 8 இடங்களை யோகி ஆதித்யநாத்தின் பிரச்சாரத்திற்கு பின் பாஜக இழந்து உள்ளது.

ராஜஸ்தான் நிலை
ராஜஸ்தானில் யோகி ஆதித்யநாத் மொத்தம் 24 இடங்களில் பிரச்சாரம் செய்தார். அதில் பாஜக 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கும் பாஜக தோல்வி அடைந்த இடங்கள் ஏற்கனவே பாஜக வலுவாக இருந்த இடங்கள் ஆகும். யோகியின் பிரச்சாரத்திற்கு பின் பாஜக அங்கு தோல்வி அடைந்துள்ளது.

சட்டீஸ்கரில் பிரச்சாரம்
யோகி சட்டீஸ்கரில் பிரச்சாரம் செய்ததால் பாஜகவிற்கு நன்மையை விட தீமையே அதிகம் நிகழ்த்து இருக்கிறது. யோகி மொத்தம் 22 இடங்களில் சட்டீஸ்கரில் பிரச்சாரம் செய்தார். அதில் பாஜக 16 இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்று இருக்கிறது.

தெலுங்கானா சொதப்பல்
ஆதித்யநாத்தால் பாஜக உத்தர பிரதேசத்தில் இதைவிட மோசமாக சொதப்பி உள்ளது. தெலுங்கானாவில் மொத்த 11 இடங்களில் யோகி பிரச்சாரம் செய்தார். அதில் வெறும் 1 இடத்தில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. இதில் பல இடங்கள் பாஜக வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்ட இடங்கள் ஆகும்.

மக்கள் விரும்பவில்லை
பாஜக சார்பாக பிரச்சாரம் செய்யும் யோகி, இந்து இஸ்லாமிய பிரிவினையை அதிகம் பேசுகிறார். இதை மக்கள் சுத்தமாக விரும்பவில்லை என்று இந்த முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் பாஜக மோசமாக தோற்று இருக்கிறது. இதனால் யோகியின் பெயர் மாற்றும் அரசியலையும் பாஜக சுத்தமாக விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது. யோகி பிரச்சாரம் செய்த 70 இடங்களில் 60 சதவிகித இடங்களை பாஜக இழந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications