Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எக்சிட் போல் முடிவுகள்.. பாஜகவிற்கு பெரும் பின்னடைவு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ராஜஸ்தான், தெலுங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல்- வீடியோ

    டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலின் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பல்வேறு டிவி சேனல்களில், இன்று மாலை வெளியாகின்றன.

    சட்டீஸ்கரில் இரு கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20ம் தேதிகள், மத்திய பிரதேசம், மிசோராமில் நவம்பர் 28ம் தேதியிலும், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதியான இன்றும், சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிடுவதற்கான கட்டுப்பாடு, இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து பல்வேறு கருத்துக் கணிப்பு அமைப்புகளும், முன்னணி தேசிய தொலைக்காட்சி சேனல்களுடன் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி இன்று மாலை வெளியிட உள்ளன. 'ஒன்இந்தியாதமிழ்' வெப்சைட்டில், இந்த கருத்து கணிப்புகளின் விவரங்களை உடனுக்குடன், அறிந்து கொள்ள இணைந்திருங்கள்.

    5 state Elections 2018: Exit Poll by tv channels will be out today - Live Updates

    Dec 07, 2018, 7:09 pm IST

    சட்டீஸ்கரில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பு - ஏபிபி டிவி-சிஎஸ்டிஎஸ் எக்சிட் போல் முடிவுகள்

    சட்டீஸ்கரில் பாஜக 52 தொகுதிகளை வெல்லும்

    காங்கிரஸ் 35 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு

    பிறர் 3 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு - ஏபிபி டிவி-சிஎஸ்டிஎஸ் எக்சிட் போல் முடிவுகள்

    Dec 07, 2018, 7:00 pm IST

    தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி 50-65 தொகுதிகளை கைப்பற்றும்

    காங்கிரஸ் கூட்டணி 38-52 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு- ரிபப்ளிக் ஜன் கி பாத் எக்சிட் போல்

    பாஜக 4-7 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு- ரிபப்ளிக் ஜன் கி பாத் எக்சிட் போல்

    Dec 07, 2018, 6:42 pm IST

    ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி- ரிபப்ளிக் ஜன் கி பாத் எக்சிட் போல்

    பாஜக 83-103 தொகுதிகளை வெல்லும்

    காங்கிரஸ் 81-101 தொகுதிகளை வெல்லும்

    பிறர் 15 தொகுதிகளை வெல்ல கூடும்- ரிபப்ளிக் ஜன் கி பாத் எக்சிட் போல்

    Dec 07, 2018, 6:31 pm IST

    தெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி ஆட்சி- இந்தியா டுடே எக்சிட் போல்

    79-91 தொகுதிகளை டி.ஆர்.எஸ் கட்சி வெல்ல வாய்ப்பு

    காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி 21-33 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு

    பாஜக 1-3 தொகுதிகளையும், பிறர் 4-7 தொகுதிகளையும் வெல்ல வாய்ப்பு

    Dec 07, 2018, 6:30 pm IST

    மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி - ரிபப்ளிக் ஜன் கி பாத் எக்சிட் போல்

    பாஜகவுக்கு 110 முதல் 126 இடம் வரை கிடைக்கலாம் - ரிபப்ளிக் ஜன் கி பாத்

    காங்கிரஸுக்கு 95 முதல் 115 வரை கிடைக்கும்

    மற்றவர்களுக்கு 6 முதல் 22 இடங்கள் வரை கிடைக்கும் - ரிபப்ளிக் ஜன் கி பாத்

    Dec 07, 2018, 6:19 pm IST

    சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி- இந்தியா டுடே, ஆக்சிஸ் எக்சிட் போல்

    55-65 தொகுதிகளை காங்கிரஸ் வெல்லும்

    பாஜக 21-31 தொகுதிகளை வெல்லும்- இந்தியா டுடே, ஆக்சிஸ் எக்சிட் போல்

    சட்டீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன

    சட்டீஸ்கரில் பெரும்பான்மைக்கு தேவை 46 தொகுதிகள்

    பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி 4-8 தொகுதிகளை வெல்ல கூடும்

    Dec 07, 2018, 6:15 pm IST

    வெளியானது ஏபிபி டிவி-சிஎஸ்டிஎஸ் எக்சிட் போல் முடிவுகள்

    மத்திய பிரதேசத்தில் 126 தொகுதிகளை காங்கிரஸ் வெல்லும்- ஏபிபி டிவி

    ஆளும் பாஜக 94 தொகுதிகளைத்தான் வெல்ல முடியும்- ஏபிபி டிவி

    Dec 07, 2018, 6:06 pm IST

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி- இந்தியா டுடே எக்சிட் போல்

    ராஜஸ்தானில் 119-141 தொகுதிகளை அமோகமாக வெல்லும் காங்கிரஸ்

    ஆளும் பாஜகவிற்கு வெறும் 55-72 தொகுதிகள்தான் கிடைக்கும்- இந்தியா டுடே எக்சிட் போல்

    Dec 07, 2018, 5:52 pm IST

    தெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி ஆட்சி-டைம்ஸ் நவ் எக்சிட் போல்

    டிஆர்எஸ் 66 தொகுதிகளை வெல்லும்-டைம்ஸ் நவ்

    காங்கிரஸ் கூட்டணி 37 தொகுதிகளை வெல்லும்

    பாஜக 7, பிறர் 9 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு- டைம்ஸ் நவ் எக்சிட் போல்

    தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன

    Dec 07, 2018, 5:48 pm IST

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்- டைம்ஸ் நவ் எக்சிட் போல்

    ராஜஸ்தானில் காங்கிரஸ் 105 தொகுதிகளை வெல்லும் - டைம்ஸ் நவ்

    பாஜக 85 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும்- டைம்ஸ் நவ்

    பகுஜன் சமாஜ் 2, பிறர் 7 தொகுதிகளை வெல்வார்கள்-டைம்ஸ் நவ்

    ராஜஸ்தானில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 தொகுதிகள் தேவை

    Dec 07, 2018, 5:44 pm IST

    சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்கும்- டைம்ஸ் நவ் எக்சிட் போல்

    சட்டீஸ்கரில் பாஜக 46 தொகுதிகளில் வெல்லும்- டைம்ஸ் நவ்

    காங்கிரஸ் 35 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு- டைம்ஸ் நவ்

    பகுஜன் சமாஜ் கட்சி 7 தொகுதிகளிலும், பிறர் 2 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்பு

    Dec 07, 2018, 5:39 pm IST

    மத்திய பிரதேசத்தில் பாஜக 102-120 தொகுதிகளை வெல்லும்-இந்தியா டுடே எக்சிட் போல்

    காங்கிரஸ் 104-122 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு - இந்தியா டுடே

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி என்று இந்தியா டுடே கணிப்பு

    Dec 07, 2018, 5:36 pm IST

    மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி- டைம்ஸ் நவ்

    126 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்-டைம்ஸ் நவ்

    காங்கிரஸ் கூட்டணி 89 தொகுதிகளை வெல்லும்- டைம்ஸ் நவ்

    பகுஜன் சமாஜ் 6, பிறர் 9 தொகுதிகளை வெல்வார்கள்-டைம்ஸ் நவ்

    மத்திய பிரதேசத்தில் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 230

    Dec 07, 2018, 5:26 pm IST

    இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது 5 மாநில எக்ஸிட் போல்கள்

    இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உட்பட பல முன்னணி டிவி சேனல்களில் எக்ஸிட் போல் வெளியாகிறது

    Dec 07, 2018, 5:24 pm IST

    மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகள் உள்ளன

    தெலுங்கானாவின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 119

    ராஜஸ்தானில் 200 தொகுதிகள் உள்ளன

    சட்டீஸ்கரில் 90 தொகுதிகளும், மிசோராமில் 40 தொகுதிகளும் உள்ளன

    Dec 07, 2018, 5:23 pm IST

    மாலை 5.30 மணிக்கு டைம்ஸ் நவ் எக்சிட் போல் வெளியாகிறது
    Dec 07, 2018, 4:50 pm IST

    லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதியாக 5 மாநில தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகிறது
    Dec 07, 2018, 3:14 pm IST

    5 மாநில தேர்தல் எக்சிட் போல் முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோராம் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன

    ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதை அறிவதற்கான முன்னோட்டம்

    டிசம்பர் 11ம் தேதி 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+