13 வினாடிகளில் அதிவேகமாக 100 குத்துகள்.. 5 வயதில்.. உலக சாதனை படைத்த இந்தியாவின் குட்டி மைக் டைசன்!
டெல்லி: குத்துசண்டையில் வேகமான நூறு குத்துக்களுக்கு சொந்தக்காரர் யார்? என்று கேட்டால், ஃபிலாய்ட் மேவெதர் ஜூனியர், மேன்னி பக்குவியோ அல்லது மைக் டைசன் உங்கள் நினைவுக்கு வரலாம்.
ஆனால் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் இந்தியாவை சேர்ந்த 5 வயது குட்டி பையன் அரிந்தம். ஆம்.. கடந்த மே மாதம் 30-ம் தேதி தான் இந்த சாதனையை படைத்தான் அரிந்தம்.

அதிவேக 100 குத்துகள்
வெறும் பதின்மூன்று வினாடிகளில் சுமார் நூறு குத்துச்சண்டை குத்துக்களை விட்டு'' நூறு குத்துச்சண்டை குத்துக்களை வேகமாக பதிவு செய்தவர்' என்ற சாதனையை வெறும் 5 வயதில் படைத்துள்ளான் அரிந்தம். இந்த சாதனையை படைத்த குட்டி பையன் அரிந்தம் கூறியதாவது:- நான் ஒன்றாம் வகுப்பில் படிக்கிறேன். குத்துச்சண்டையை மிகவும் விரும்புகிறேன்,. ஒரு பெரிய குத்துச்சண்டை வீரராக மாற விரும்புகிறேன்.

3 மணி நேரம் பயிற்சி
ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் 3 மணி நேரம் பயிற்சி செய்கிறேன். எனக்கு பிடித்த குத்துச்சண்டை வீரர்கள் விஜேந்தர் சிங் மற்றும் மேரி கோம். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க செல்லும் மேரி கோம். மேடமுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்று அரிந்தம் கூறினான். மகனின் சாதனை குறித்து அரிந்தமின் தந்தை அருண் கவுர் கூறியதாவது:-

தந்தை சொல்வது என்ன?
அரிந்தத்தின் ஐந்தாவது பிறந்தநாளில் ஒரு குத்துசண்டை பழகும் பையை கொண்டு வரும்படி அவன் பல முறை என்னிடம் கேட்டுக் கொண்டான். அந்த பையை அடிக்கடி குத்துகள் விட்டு கொண்டே இருந்தான். அரிந்தத்தின் ஐந்தாவது பிறந்தநாளில் நான் ஒரு குத்து பையை கொண்டு வரும்படி பல முறை கேட்டுக் கொண்டான்.

சாதனை நடந்தது
நான் அதை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விரைவில் அவன் இயல்பாகவே சிறப்பாக செயல்படுவதைக் கண்டேன். பின்னர் அவனை அகாடமியில் பயிற்றுவிக்க முடிவு செய்தேன். ஆனால் கொரோனா காரணமாக அது நடக்கவில்லை. எனவே வீட்டில் வைத்து மட்டுமே அவனுக்கு பயிற்சி கொடுத்தோம். நாங்கள் கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸை அணுகினோம். நாங்கள் மகனின் குத்துசண்டை சாதனை வீடியோவை அவர்களுக்கு அனுப்பினோம். அதனை ஆராய்ந்த பின்னர் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக எங்களுக்கு தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications