‛வேண்டவே வேண்டாம்’.. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்! இதுவரை 5000 பேர் கருத்து
டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து கருத்துக்களை வரும் 15ம் தேதி வரை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 5000 பேர் தற்போது வரை கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதேநேரம் எதிர்க்கட்சிகள் இதனை தீவிரமாக எதிர்த்து வருகின்றன.
கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியில் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து ஏராளமான மாற்றங்களை செய்திருக்கிறது. முத்தலாக் தடை, காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு ரத்து, வேளாண் சட்டங்கள், சிஏஏ போன்றவை பாஜகவுக்கு விமர்சனங்களையும், ஆதரவையும் மாறி மாறி கொடுத்திருக்கின்றன. இந்நிலையில் லிஸ்ட்டில் தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தையும் சேர்க்க பாஜக முயன்று வருகிறது.

அதாவது, மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் மேலெழுந்துள்ளன. ஒருவேளை இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் புதியதாக அப்போதுதான் ஆட்சியமைத்த மாநில அரசுகளை மத்திய அரசு கலைத்துவிடுமா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
அதேபோல, இந்த திட்டம் ஜனநாயக தன்மையை ஒழித்துவிடும் என்றும், மாநில அரசுகளின் உரிமையை நசுக்கிவிடும் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. என்னதான் விமர்சனங்கள் எழுந்தாலும், மத்திய அரசு இதிலிருந்த பின்வாங்குவதை போல தெரியவில்லை. எனவே திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி உயர்நிலைக் குழுவை அமைத்தது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் அதிக எம்.பி.க்களைக் கொண்ட எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
மேலும், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உயர்நிலைக் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பார். மத்திய சட்டத் துறைச் செயலர் நிதின் சந்திரா, குழுவின் செயலராகப் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சி சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த குழுவில் இடம் பெற மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இருப்பினும் இந்த குழுவின் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வரும் 15க்குள் தெரிவிக்கலாம் என்று உயர்மட்ட குழு கூறியிருந்தது. அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் குறித்த சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு கேட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை சுமார் 5000 பேர் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஒரே நாடு, ஒரே தேர்தல் உயர்மட்டக் குழுவிற்கு கடிதம் எழுதியுள்ள சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, "நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயக விரோதமானது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications