புற்றுநோய் மருந்துகள்.. விலை குறையுமா? இன்று 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - டெல்லி பறந்த தங்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொள்ள இருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி அறிமுகமாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. மாதந்தோறும் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

 50th GST Council meeting held today lead by Union finance minister Nirmala Sitharaman

இதில் மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம். ஒவ்வொரு முறை இந்த கூட்டத்தின்போது பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரியில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளார்கள். தமிழ்நாட்டின் சார்பில் அண்மையில் நிதியமைச்சராக பதவியேற்ற தங்கம் தென்னரசு இதில் கலந்துகொள்ள உள்ளார்.

இந்த கூட்டத்தில், புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு வழங்குவது குறித்தும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மிக முக்கியமான தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை இந்திய விண்வெளித் துறையில் அதிகரிக்கும் வகையில், அந்த நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதல சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ விளையாட்டுகள், குதிரைப் பந்தயம் போன்றவைக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என அனைத்து மாநில நிதியமைச்சா்களின் குழு பரிந்துரை வழங்கி இருந்தது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேபோன்று, பயன்பாட்டு வாகனங்களுக்கான விளக்கத்தை வகுத்து எஸ்யுவி வாகனங்களை போல எம்யுவி வாகனங்களுக்கும் 22% செஸ் வரி விதிப்பது குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அத்துடன் ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+