51 நாடுகளின் தூதர்கள் புகழாரம்.. சுஷ்மா சுவராஜுக்கு.. கைப்பட எழுதிய இரங்கல் குறிப்புகள்!
டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு 51 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இரங்கல் தெரிவித்து குறிப்புகளை கைப்பட எழுதியுள்ளனர். இதை புத்தகமாக தொகுத்துள்ளது ஐ.நா. சபைக்கான இந்திய தூதரகம்.
சமீபத்தில் உடல் நல பாதிப்பாலும், மாரடைப்பாலும் மரணமடைந்தார் சுஷ்மா சுவராஜ். அவருக்கு உலக நாடுகள் பலவும் புகழஞ்சலி செலுத்தின. இந்த நிலையில் ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர செயலகம் ஒரு இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதில் கலந்து கொண்டு 51 நாடுகளின் தூதர்கள் தங்களது கைப்பட சுஷ்மாவுக்கு இரங்கல் தெரிவித்து குறிப்புகளை எழுதினர். இதை புத்தக வடிவில் திரட்டியுள்ளது இந்திய தூதரகம். இதுகுறித்து இந்திய தூதர் சையத் அக்பருதீன் வெளியிட்டுள்ள டிவீட்டில், உலக நாடுகளின் தூதர்கள் சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் தெரிவித்து குறிப்புகளை எழுதியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
In diplomacy, words matter...
— Syed Akbaruddin (@AkbaruddinIndia) August 10, 2019
Diplomats from all across the world visit @IndiaUNNewYork to record condolences on the sad demise of Madam @SushmaSwaraj
🙏🏽 pic.twitter.com/f2NxWxHiGg
இதுதொடர்பான 2.20 நிமிடம் ஓடக் கூடிய ஒரு வீடியோவையும் இந்தியத் தூதர் டிவீட்டில் இணைத்துள்ளார். அதில் உலக நாடுகளின் தூதர்கள் இரங்கல் குறிப்புகளைப் பதிவு செய்யும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
ரஷ்யா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், போட்ஸ்வானா, பிரேசில், தென் கொரியா, எகிப்து, பிஜி, ஜார்ஜியா, கானா, கென்யா, மலேசியா, மாலத்தீவுகள், மால்டா, மியான்மர், நேபாளம், நியூசிலாந்து, சிங்கப்பூர், இலங்கை, ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அதில் சில.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications