எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை.. லித்தியம் அயான் பேட்டரி வரி குறையுமா? இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
டெல்லி: இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 52 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. மாதந்தோறும் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம்.

இந்த கூட்டத்தின்போது பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டு உள்ள ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று தலைநகர் டெல்லியில் 52 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. டெல்லியில் உள்ள சுஸ்மா ஸ்வராஜ் பவனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களில் நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். நேற்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள், செல்போன், லேப்டாப் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்திய அயான் பேட்டரிக்கான வரி குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது லித்தியம் அயான் பேட்டரிக்கு ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் அது 5 சதவீதமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், பொடியாக்கி விற்பனை செய்யப்படும் தினைகளுக்கான வரி விலக்கு, வங்கி சேவைகளுக்கான வரி தெளிவுபடுத்துவது பற்றியும் இதில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இந்திய ரயில்வே சேவைகள் தற்போது ரிவர்ஸ் சார்ஜ் முறையின் கீழ் இயங்கி வரும் நிலையில், அதனால் ரூ.1300 க்கும் அதிகமாக இழப்பு ஏற்படுவதால் அவற்றை முன்னோக்கி கட்டண முறைக்கு கீழ் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.
குறிப்பாக நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. லித்தியன் அயான் பேட்டரிக்கான வரி குறைக்கப்படலாம் என்ற தகவல் ஒரு பக்கம் இருந்தாலும், வரி விகிதங்களை கண்காணிக்கும் கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் பிட்மெண்ட் குழு வரி விகிதங்களின் மாற்றங்களை பரிந்துரைக்காததால் பெரிய அறிவிப்புகள் இந்த கூட்டத்தில் இருக்காது என்றே கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications