சர்க்கரை வியாதி டூ ரத்த கொதிப்பு வரை 53 மாத்திரைகளில் தரமில்லை.. லிஸ்ட்டை பாருங்க
டெல்லி: சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வைட்டமின் குறைபாடு, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எடுத்து கொள்ளும் பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் தரமானதாக இல்லை என்று திடுக்கிட வைக்கும் தகவலை இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரை, மருந்துகள் அனைத்து உரிய பரிசோதனைகளுக்கு பிறகு தான் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனைகளை சிடிஎஸ்சிஓ எனும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO or Central Drugs Standards Control Organisation) தான் மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு மாத்திரை, மருந்துகள் தரமானதாக இருக்கிறது என்று சொன்னால் மட்டுமே ஒரு நிறுவனத்தால் நம் நாட்டில் அதனை விற்பனை செய்ய முடியும். மேலும் அவ்வப்போது இந்த அமைப்பு தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாத்திரை, மருந்துகளின் தரத்தையும் பரிசோதிக்கும்.
அப்போது ஏதேனும் மருந்து, மாத்திரைகள் குறைபாடு இருப்பின் அதனை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். அந்த வகையில் கடந்த மாதம் சளி முதல் காய்ச்சல் வரை பயன்படுத்தப்படும் 156 வகையான ஃஎப்டிஎஸ் (FDS or Fixed Dose Combination) வகையை சேர்ந்த மாத்திரைகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் நம் நாட்டில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பல மாத்திரை, மருந்துகள் என்பது நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது சமீபத்தில் சந்தேகத்திற்குரிய மாத்திரை, மருந்துகளை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்தது.
இதில் கால்சியம், வைட்டமின் டி3, வைட்டமின் சி குறைபாடு, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தற்கான மாத்திரைகளும் அடங்கும். இந்த ஆய்வின்போது 53 மாத்திரைகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வைட்டமின் சி, வைட்டமின் டி3 ஷெல்கால் (Shelcal), வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி குறைபாட்டுக்கான softgels, antiacid Pan-D, Paracetamol tablets IP 500 mg, சர்க்கரை நோய்க்கான Glimepiride, உயர் ரத்த அழுத்தத்திற்கான Telmisartan உள்ளிட்ட மாத்திரைகள் அடங்கும்.
இதுதவிர வயிற்று தொற்று பிரச்சனைக்கு எடுத்து கொள்ளப்படும் மெட்ரோனிடாசோல், அன்டிபயோடிக்ஸ் மாத்திரையான Clavam 625, Pan D, குழந்தைகளுக்கான பாக்டீரியா தொற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படும்ஹெட்டரோவின் செபோடெம் எக்ஸ்பி 50 மாத்திரைகளும் தரமின்றி உள்ளது. அதேபோல் கர்நாடகா அன்டிபயோடிக்ஸ் மற்றும் பார்மசூட்டிக்கல் லிமிடெட் வழங்கும் பாராசிட்டமால் மாத்திரையின் தரத்திலும் குறை கண்டுிபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாத்திரை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் ஏற்க மறுத்துவிட்டன. மாறாக, தங்களின் பெயரில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் மாத்திரைகள் தான் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்கள் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளன. இருப்பினம் கூட குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மாத்திரைகள் தரமின்றி இருப்பின் அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications