டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் வரலாறு காணாத பனி.. கால்வாய்க்குள் பாய்ந்த கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி அருகே பனிமூட்டத்தால் கார் கால்வாய்க்குள் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகிவிட்டனர்.

வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. டெல்லியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று வரலாறு காணாத பனிமூட்டம் காணப்பட்டது.

100 மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருட்களை கூட பார்க்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 2.6 செல்சியஸாக பதிவாகியுள்ளது.

<strong>We miss you Tamilisai:</strong> We miss you Tamilisai: "அப்பா என்கூட பேசலையே".. ஏங்கி தவித்த தமிழிசை.. அவரில்லாமல் தவிக்கும் தமிழகம்

வாகனத்தை

வாகனத்தை

வாகன ஓட்டிகள், அவசர தேவைக்காக வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்களும் பனிமூட்டத்தில் பொறுமையாக வாகனத்தை ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருட்டு

இருட்டு

டெல்லியில் நேற்று கடும் பனி மூட்டம் காரணமாக ரயில் , விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பகல் 12 மணியே இருட்டாக காணப்படுகிறது.

பனிமூட்டம்

பனிமூட்டம்

இந்த நிலையில் டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள தாங்கூரில் நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கார் மூலம் கெர்லிக்கு சென்றனர். அப்போது பனிமூட்டம் காரணமாக அவர்களது கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.

6 பேரும் பலி

6 பேரும் பலி

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 11 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 2 குழந்தை உள்பட 6 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

English summary
As Delhi faces dense fog, car plunge into a canal near Greater Noida leads 6 died in spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X