லாக்டவுன் விதிமுறையை மதிக்காவிட்டால்.. 6 மாதம் சிறை, அபராதம்.. மக்களே உஷார்
டெல்லி: லாக்டவுன் விதிமுறையை கடைபிடிக்காவிட்டால், 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
Recommended Video
1897ம் ஆண்டின் தொற்றுநோய் நோய்கள் சட்டத்தின் கீழ், லாக்டவுன் போன்ற அரசு உத்தரவுக்கு, கீழ்ப்படியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழி உள்ளது, என்று மூத்த அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தின் கீழ், ஒழுங்குமுறை அல்லது உத்தரவுக்கும் கீழ்ப்படியாத எந்தவொரு நபரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படுவார், இது ஆறு மாத சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டிற்கும் வழிவகுக்கும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 75 மாவட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை முழுமையான லாக்டவுன் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
முன்னதாக, விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த அறிவுரை வெளியாகியிருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்ட ட்வீட்டில், சிலர் இந்த வைரசை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அரசு கொடுக்க கூடிய நெறிமுறைகளை அவர்கள் முழுமையாக பின்பற்றவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில்தான், ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கை என்னால் என்ன என்று விளக்கம் கேட்டபோதுதான், அதிகாரிகள், இப்படியான விளக்கம் அளித்தனர்.
லாக்டவுன் செய்யப்பட்ட நகரங்களில், குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் தவிர பிற நிறுவனங்கள் செயல்பட அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications