அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சா.. ரூ 100 கட்.. 6 வயசு வாண்டின் அடேங்கப்பா ஒப்பந்தம்!
டெல்லி: குழந்தைகள் வளர்ப்பு என்பது சுகமானதாக இருக்கும். 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்ப்பது என்பது ஒரு புறமிருந்தாலும் அந்த குழந்தைகள் செய்யும் சுட்டித்தனங்கள் நம் கவலைகளை மறக்கடிக்கின்றன.
பிறந்த குழந்தைகள், ஒரு வயதுக்குள்பட்ட குழந்தைகள், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள், அதன் பின்னர் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளை கவனித்து கொள்வது பெரிய கடமையாகும். இதில் சற்று சிதறினாலும் குழந்தைக்கு ஏதாவது நேரிட்டுவிடும். இல்லாவிட்டால் பெரியவர்களுக்கு வேலை இரட்டிப்பாகிவிடும்.
அவர்கள் கேட்டு நாம் கொடுக்காவிட்டால் வீட்டையே இரண்டாக்கிவிடுவார்கள். அடித்துவிட்டது போல் அழுவது, கத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனாலும் எல்லாமுமே ரசிக்கக் கூடியதே.

ட்விட்டர் பக்கம்
அந்த வகையில் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டைம்டேபிளை வெளியிட்டுள்ளார். இதில் தனது 6 வயது மகன் அபீருடன் அவரது தந்தை வினோதமான வேடிக்கையான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். தினமும் அந்த 6 வயசு சிறுவன் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும்? எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது? என்பது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிற்றுண்டி
தினமும் அலாரம் அடித்து 10 நிமிடங்கள் கழித்து எழுந்துவிட வேண்டும். டிவி பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் அனுமதி உண்டு. பால் குடிக்க அடம்பிடிக்கக் கூடாது, அழக் கூடாது, கத்தி கூப்பாடு போட கூடாது போன்ற கண்டிஷன்களும் போடப்பட்டுள்ளன. பல் துலக்குவது, குளிப்பது, காலை சிற்றுண்டியில் தொடங்கி இரவு தூங்கும் வரை நேரத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 ரூபாய் ஊக்கத் தொகை
இதில் ஹைலைட் என்னவெனில் அந்த சிறுவன் வாரத்தில் 7 நாட்களும் அழாமல் கத்தாமல் சண்டையிடாமல் அடம்பிடிக்காமல் இருந்தால் ரூ 100யை சிறுவனுக்கு தந்தை கொடுத்துவிடுவார். இந்த ஒப்பந்தத்தை வைத்து இணையத்தில் அந்த தந்தையிடம் பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
Recommended Video

ஊக்கத் தொகையை ஏற்றி கொடுங்கள்
அவரும் ஜஸ்ட் ரிலாக்சேஷனுக்காக பதிவிட்டது. மிகவும் கூர்ந்து ஆராயாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். சிலர் "பையன் ரூல்ஸை கடைப்பிடித்தால் அடுத்த மாதத்தில் இருந்து ஊக்கத் தொகையை கொஞ்சம் போட்டுக் கொடுங்கள் என்கிறார்கள். இன்னும் சிலர் இந்த ஒப்பந்தம் காலாவதியாவது எப்போது என கேட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications