பாலியல் குற்றங்கள்.. இந்தியாவில் அதிகரிக்கும் மரண தண்டனை - இனி கை வைத்தால் கைமா தான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு நீதிமன்றங்கள் விதித்த அனைத்து மரண தண்டனைகளிலும், 65 சதவீதத்திற்கும் அதிகமானவை பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் விதிக்கப்படும் மரணதண்டனைகள் குறித்து ஆய்வு செய்யும் 39A திட்டம் மூலம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

65% death penalties in india linked sexual crimes project 39A

2016 முதல், நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிக்கும் குற்றங்களின் பட்டியலில் பாலியல் குற்றங்களின் பங்கு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2016 ல் 17.6 சதவீதத்திலிருந்து 2017 ல் 37.27 சதவீதமாகவும், 2018 ல் 41.1 சதவீதமாகவும், 2019 ல் 53.39 சதவீதமாகவும் .உயர்ந்திருக்கிறது

ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2020 ஆம் ஆண்டில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் 102 எனும் எண்ணிக்கையில் இருந்து 77 ஆகக் குறைந்துவிட்டாலும், அந்த 77-ல் 50 தண்டனைகள் பாலியல் வன்முறை குற்றங்களில் தொடர்புடையவையாகும்.

2020-ல் விதிக்கப்பட்ட பாலியல் குற்றங்களுக்கான 50 மரண தண்டனைகளில் 41 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், ஒன்பது வழக்குகளில் மட்டுமே பெரியவர்களை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்த வழக்காக பதியப்பட்டுள்ளன. 21 வழக்குகளில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையாகியுள்ளனர். 16 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் வயது 12-18 வயதுக்கு இடைப்பட்டதாக உள்ளது.

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, 2020 மார்ச் மாதத்தில் தான் முகேஷ், அக்‌ஷய் குமார் சிங், வினய் சர்மா மற்றும் பவன் குமார் ஆகிய நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் அனைவரும் 2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கின் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+