INS போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல்.. அவசரப்பட்டு செய்த தவறு! இப்போது பாருங்க என்ன ஆச்சுனு
டெல்லி: இந்திய போர்க்கபலான INS கொல்கத்தா மீது, பாகிஸ்தானின் போர்க்கப்பல் மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் ரொம்பவே அவரசப்பட்டுவிட்டது என்றும், மோதல் காரணமாக பாகிஸ்தானின் கப்பல் பலத்த சேதத்தை சந்தித்திருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரபிக்கடலில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் மீது பாகிஸ்தானின் பிஎன்எஸ் ஹுனைன் கப்பல் மோதிய விபத்து குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று வட அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஐஎன்எஸ் கொல்கத்தா ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் கடற்படையின் சீ ஸ்பார்க் கூட்டுப்பயிற்சியில் இருந்த பிஎன்எஸ் ஹுனைன் கப்பல் அதனை பின்தொடர்ந்து கண்காணித்துள்ளது. அப்போது மிக வேகமாக வந்த பாகிஸ்தான் கப்பல் நெருக்கமாக திரும்ப முயன்றபோது எதிர்பாராத விதமாக இந்திய போர்க்கப்பலின் மீது உரசியது.
இந்த சம்பவத்தால் பாகிஸ்தானின் பிஎன்எஸ் ஹுனைன் கப்பலின் முன்பகுதியில் மிகப்பெரிய பள்ளம் மற்றும் விரிசல் ஏற்பட்டு அது பழுது பார்ப்பதற்காக துறைமுகத்திற்கு திரும்ப வேண்டியதாயிற்று. மேலும், இச்சம்பவத்தில் 4 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பிரம்மாண்டமான கட்டமைப்பை கொண்ட இந்திய தயாரிப்பான ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலுக்கு எந்தவித கட்டமைப்பு சேதமும் ஏற்படவில்லை. அது தனது கடல்சார் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
பாதுகாப்பு துறை வல்லுநர்களின் கூற்றுப்படி இவ்விரு கப்பல்களின் அளவும் திறனும் முற்றிலும் மாறுபட்டவை. பாகிஸ்தான் கப்பல் இந்திய போர்க்கப்பலுக்கு எந்தவித இணையாக நிற்க முடியாது. ஏனெனில் ஐஎன்எஸ் என்பது பிரம்மாண்டமான டெஸ்ட்டிராய்டு வகை போர்க்கப்பலாகும். ஆனால், பாகிஸ்தானினுடையது சாதாரண கடலோர ரோந்து கப்பலாகும்.
எடையை வைத்து பார்த்தால், பாகிஸ்தான் கப்பல் 2,600 டன் எடை வரும். ஆனால்.. ஐஎன்எஸ் கொல்கத்தா 7,400 டன் எடை கொண்டதாகும். நம்முடைய கப்பலில் பிரம்மோஸ், சூப்பர்சோனிக் ஏவுகணைகள், அதிநவீன ரேடார், நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு கொண்டது. பாகிஸ்தான் கப்பலில் சிறிய ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் 30 மிமீ சிறிய ரக துப்பாக்கிகள் மட்டுமே உள்ளன.
இது குறித்து பாதுகாப்பு விவகார ஆய்வாளர் சந்தீப் உன்னிதன் கூறுகையில், "பாகிஸ்தான் கப்பல் மேற்கொண்டது மிகவும் ஆபத்தான ஒரு முயற்சி. ஒருவேளை ஐஎன்எஸ் கொல்கத்தா தனது வீரர்களை காப்பாற்ற கப்பலை திருப்பி பாகிஸ்தான் கப்பல் மீது நேராக மோதியிருந்தால் 2,600 டன் கொண்ட அந்த சிறிய கப்பல் அப்படியே கடலில் தலைக்கீழாக கவிழ்ந்து மூழ்கியிருக்கும்" என தெரிவித்திருக்கிறார்.
இப்படி இரண்டு நாட்டு கப்பல்களும் மோதிக்கொள்வது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னர் கடந்த 2011ம் ஆண்டும் இதேபோல பாகிஸ்தானின் பிஎன்எஸ் பாபர் கப்பல் இந்தியாவின் ஐஎன்எஸ் கோதாவரி கப்பல் மீது மோத முயன்றது. தற்போது இந்த விபத்தை தொடர்ந்து.. இரு நாடுகளும் தங்களின் தூதர்களை நேரில் அழைத்து தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
