Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

71 ஆவது உலக அழகி போட்டி: 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இன்று தொடக்கம்! இறுதி போட்டி எப்போது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 71ஆவது உலக அழகி போட்டி இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் உலக அழகிப் போட்டி 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் நடைபெறவுள்ளது. உலக அழகி போட்டிகள் கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன. 1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு பட்டத்தை தட்டி சென்றார்.

71st Miss world starts in India from Today

இந்தியாவில் கடைசியாக 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டி நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் இந்த போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி கூறுகையில், 71ஆவது உலக அழகி இறுதி போட்டியை இந்தியாவில் நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தனித்துவமான கலாச்சாரம், அழகிய இந்திய நகரங்களையும் காண நாங்கள் காத்திருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

71st Miss world starts in India from Today

130 நாடுகளில் இருந்து அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஒரு மாதத்திற்கு இந்த போட்டிகள் நடைபெறும். இந்தியாவில் பல நகரங்களில் போட்டியாளர்களின் திறமை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தற்போது உலக அழகியாக இருப்பவர் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா. இவர் இந்தியாவில் உலக அழகி போட்டி குறித்த விளம்பரப்படுத்தும் பணிகள் உள்ளார்.

இதுகுறித்து உலக அழகி கரோலினா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் உலக அழகிக்கு நகரான மதிப்புகளை கொண்ட இந்த அழகான நாட்டில் (இந்தியா) உலக அழகிக்காக நான் பெற்ற கிரீடத்தை வெல்ல போகும் இன்னொரு வெற்றியாளருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உபசரிப்பில் இந்தியாவை போல ஒரு நாட்டை பார்க்க முடியாது.

71st Miss world starts in India from Today

இங்கு வந்திருப்பது தாய் வீட்டிற்கு வந்ததை போல் உள்ளது என்றார். மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச கண்காட்சி அரங்கில் மார்ச் 9ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் இறுதி போட்டி ஒளிபரப்பப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறையை இந்தியா வென்றுள்ளது. ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகே (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியர்கள் ஆவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+