இன்று ராஜீவ் காந்தியின் 77-வது பிறந்தநாள்.. டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

ராஜீவ் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது... ஆகஸ்ட் 20, 1944-ல் பிறந்த ராஜீவ் காந்தி, 1984 முதல் 1989 வரை இந்த தேசத்தின் பிரதமராக பணியாற்றியவர்...

1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.... பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் காங்கிரசால் சத்பவான திவாஸ் - ஆக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 சத்பவனா திவாஸ்

சத்பவனா திவாஸ்

வருடாவருடம், நாடு முழுவதும் உள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்திக்கு சத்பவனா திவாஸ் அன்று கூடி அஞ்சலி செலுத்துவார்கள்... இந்த77 வது பிறந்தநாளை முன்னிட்டும் நாடு முழுவதும் ரத்த தான முகாம்கள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய இளைஞர் காங்கிரஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது..

அஞ்சலி

அஞ்சலி

அதேபோல, மறைந்த பிரதமருக்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பு புகைப்பட கண்காட்சியும் டெல்லியில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் அறிக்கையும் வெளியாகி இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வந்தது.. அந்த வகையில் இன்றைய தினம் இக்கண்காட்சி கொண்டாடப்பட்டு வருகிறது..

 நினைவிடம்

நினைவிடம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது மகனான ராகுல் காந்தி அவரது நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்... டெல்லியில் வீர்பூமியில் ராஜீவ் காந்தியின் நினைவிடம் உள்ளது.

தமிழகம்

தமிழகம்

காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்... அதேபோல, தமிழக காங்கிரஸ் கட்சியினரும் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.. இதனிடையே, ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளான இன்று, சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+