இந்தியா முழுவதும் தகிக்கும் போராட்டம்.. குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் 8 பேர் பலி
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்து கொண்ட 8 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் 5 பேர் உத்தரப்பிரதேசத்திலும், இருவர் பிஜனோரிலும், ஒருவர் கான்பூரிலும், தலா ஒருவர் பிரோஸாபாத் மற்றும் சாம்பலிலும் பலியாகிவிட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரின் பெயர்களும், இலங்கை தமிழர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, டெல்லி, தமிழகம், கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்ற போது மங்களூரில் இருவர், லக்னோவிலும் ஒருவர் என 3 பேர் பலியாகிவிட்டனர்.

மோதல்
உத்தரப்பிரதேசத்தில் படோடி, பஹ்ரைச், அம்ரோஹா, பரூக்காபாத், காஸியாபாத், வாரணாசி, முஸாபர்நகர், சஹரான்பூர், ஹாப்பூர், ஹத்ராஸ், ஹமீர்பூர், மஹோபா ஆகிய மாவட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
உத்தரப்பிரதேசத்தின் அலிகார், மாவ், அசாம்கார், லக்னோ, கான்பூர், பரேலி, ஷாஜஹான்பூர், காஸியாபாத், சம்பல், அலகாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. கேரளா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டம்
இங்கு சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை போராட்டக்காரர்கள் மறித்தனர். அப்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலியானதாக கூறப்படுகிறது. ஜம்மா மசூதி மற்றும் டெல்லி கேட் பகுதிகளில் நேற்று மாலை பெரும் போராட்டம் நடைபெற்றது.

ஜாமியா பல்கலைக்கழகம்
பதற்றமான இடங்களில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மா மசூதியிலிருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்ல முயன்றவர்களை போலீஸார் டெல்லி கேட் பகுதியில் தடுத்தனர். ஜாமியா பல்கலைக்கழகத்தில் 5ஆவது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.

கார் தீவைப்பு
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட 8 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் 5 பேர் உத்தரப்பிரதேசத்திலும், இருவர் பிஜனோரிலும், ஒருவர் கான்பூரிலும், தலா ஒருவர் பிரோஸாபாத் மற்றும் சாம்பலிலும் பலியாகிவிட்டனர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. தர்யாகஞ்ச் பகுதியில் துணை கமிஷனர் அலுவலகம் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீவைத்து எரிக்கப்பட்டது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications