கையால் சாப்பிடுறாங்க, கழிப்பறைக்கு தண்ணீர்! வினோதமான நாடு இந்தியா!அமெரிக்க பெண்ணின் பதிவு டிரெண்டிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா அமெரிக்கா இரு நாடுகளும் உணவு, மொழி, கலாச்சாரம் என அனைத்திலும் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. இதற்கிடையே டெல்லியில் வாழும் அமெரிக்கப் பெண் ஒருவர் இந்திய மக்களிடையே உள்ள சில பழக்கவழக்கங்களைப் பட்டியலிட்டு, இவை நிச்சயம் அமெரிக்கர்களைச் சங்கடப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், அது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்த நவீன காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்கள் தாய்நாடுகளை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று செட்டில் ஆவது நார்மலான ஒன்றாக மாறி வருகிறது. நமது நாட்டில் இருந்து அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு இதுபோல பலரும் சென்று செட்டில் ஆவார்கள். அதேபோல இந்தியாவிலும் கூட பலரும் வந்து செட்டில் ஆவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

US India offbeat

அமெரிக்கப் பெண்

அப்படிக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் செட்டில் ஆனவர் தான் கிறிஸ்டன் பிஷ்ஷர். அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் இப்போது டெல்லியில் வசித்து வருகிறார். இதற்கிடையே இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியர்களுக்கு என்றே வேரூன்றி இருக்கும் சில பழக்கவழக்கங்கள் குறித்துப் பட்டியலிட்டுள்ளார். இந்தியாவில் அனைவரும் பின்பற்றும் இவை அமெரிக்காவின் மிகவும் வினோதமாகவே பார்க்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் முதலாவது கழிப்பறை தான். அமெரிக்காவில் பொதுவாகக் கழிப்பறையில் டாய்லெட் பேப்பர் தான் இருக்கும். நம்ம ஊரில் கழிப்பறை யூஸ் செய்த பிறகு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வோம். ஆனால், அமெரிக்காவில் இந்த பேப்பர் தான். இதைச் சுட்டிக்காட்டியுள்ள பிஷ்ஷர், தண்ணீரைக் கொண்டு செய்யும் போது நனைவதால் அது சங்கடப்படுத்தும் என்றும் அது அமெரிக்கர்களை எரிச்சலடைய வைக்கும் என்றும் குறிப்பிட்டார்

வித்தியாசமான பழக்கம்

அவர் மேலும் தனது இன்ஸ்டாவில், "அடுத்துச் செருப்புகளைப் பகிர்ந்து கொள்வது.. இந்திய வீடுகளில் செருப்புகள் பொதுவாக இருக்கும்.. அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றே இருக்கும். இது அமெரிக்கர்களுக்கு செட் ஆகாது. அடுத்தது தண்ணீர் பட்டில்களை பகிர்ந்து கொள்வது. அமெரிக்கர்கள் பொதுவாகச் சொந்தமாகத் தண்ணீர் பாட்டிலை வைத்திருக்க விரும்புகிறார்கள். தண்ணீர் பட்டிலை பகிர்வது சுகாதாரமற்றது என்றே மக்கள் நினைப்பார்கள்.

கையில் சாப்பிடுகிறார்கள்

அடுத்தது உணவு கலாச்சாரம்.. இந்தியாவில் ஒருவர் ஒரு உணவை ஆர்டர் செய்தால் அதை உடன் வந்த அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், அமெரிக்காவில் அவர்கள் பகிர மாட்டார்கள். தனியாகவே ஆர்டர் செய்து கொள்வார்கள். உணவைப் பகிர்வது அவர்களுக்குப் பிடிக்காது. அடுத்து முக்கியமானது கைகளில் உணவைச் சாப்பிடுவது. இந்த பழக்கம் இந்தியாவில் ஆழமாக வேரூன்றிய இருக்கும். இருப்பினும், அமெரிக்கர்களுக்கு அது பிடிக்காது. சாப்பிடும் போது கைகளில் உணவு படுவது அவர்களுக்குப் பிடிக்காது.

அமெரிக்காவில் குழந்தைகளைத் தனியாக கார் சீட்டில் தான் உட்கார வைப்பார்கள். குழந்தைகளுக்கான இருக்கையில் அமர வைத்து.. சீட் பெல்ட் போட்டு லாக் செய்தே குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். குழந்தைகளை மடி மீது உட்கார வைத்து அழைத்துச் செல்வதை அமெரிக்கர்கள் விரும்ப மாட்டார்கள்.

கூட்டுக் குடும்பம்

குழந்தைகளுடன் ஒன்றாகப் படுத்துத் தூங்குவது என்பது இந்தியாவில் இயல்பாக இருக்கும் ஒன்று. ஆனால், அமெரிக்காவில் குழந்தைகளுக்குத் தனி அறை, பெற்றோருக்குத் தனி அறை என்றே இருக்கும். மேலும், இந்தியாவில் திருமணத்திற்குப் பிறகு மாமியார் மாமனார் உடன் இருப்பார்கள். ஆனால், அமெரிக்காவில் இதுவும் மிக மிக அரிதாகவே இருக்கும் ஒன்று" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியர்கள் சொல்வது என்ன?

இந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இந்தியப் பழக்கவழக்கங்களை அவர் குறை சொல்லவோ அல்லது விமர்சிக்கவோ இல்லை. இரு நாட்டுப் பழக்கங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மட்டுமே அவர் பட்டியலிட்டுள்ளார். இதனால் இந்தியர்களுமே கூட இந்த வீடியோவை பகிர்ந்தே வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+