யப்பா சாமி.. இந்த வயதிலும் இத்தனை எனர்ஜியா.. இணையதளத்தை கலக்கும் 80 வயசு தாத்தா!
டெல்லி: விளையாட்டுக்கும் படிப்பிற்கும் வயது ஒரு பொருட்டே இல்லை. பொதுவாக தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு வயது என்பது வெறும் எண் (Age is just a number) என்பார்கள்.
Recommended Video
தன்னம்பிக்கையும் மனஉறுதியும்தான் ஒருவரின் செயல்பாட்டை தீர்மானிக்குமே தவிர வயது அல்ல என்பது அதிக வயதில் சாதிக்கும் நபர்களின் வாதமாக உள்ளது. அதிக வயதுடையவர்கள் செய்யும் வேலையை குறைந்த வயதுடையவர்களால் செய்ய முடியாது. இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.
நம் வீடுகளிலேயே நம் பாட்டி, அம்மா செய்த வேலைகளை இன்று நம்மால் செய்ய முடிவதில்லை. அது போல் நமது தாத்தா, அப்பாவிற்கு இருக்கும் உடல் உறுதி இன்று நம்மில் பலருக்கு இருப்பதில்லை.

சாப்பாடு
இதற்கு ஊட்டச்சத்து மிக்க சாப்பாடுதான் காரணம் என சொல்வது ஒரு புறமிருந்தாலும், நம்மால் முடியும் என்ற ஒரு தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளாததும் ஆகும். 30 வயதுக்கு மேலானால் வீட்டு வேலைகளை செய்ய முடியாது. 40 வயதானால் பார்வை மங்கும். 50 வயதானால் ஓட முடியாது, 60 வயதில் நடக்க முடியாது என சொல்வதெல்லாம் நமது இயலாமை இல்லை, நம் மனதின் இயலாமையாகும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள்.

நம்மால் முடியும்
நம்மால் முடியும் என நினைத்து செய்யும் எந்த வேலையும் சிறப்பாக இருக்கும். வயதானவர்கள் சிறு வயதில் கனவு கண்ட படிப்பை தற்போது படிக்கிறார்கள். அது போல் 80 வயது தாத்தா ஒருவர் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்டுத் தீயாய் பரவி வருகிறது. கையில் பேட்டை வைத்துக் கொண்டு பந்தை ஓங்கி அடிக்கிறார்.

நெட்டிசன்கள்
பின்னர் ரன்களை எடுக்க ஓடுகிறார். சில நேரங்களில் ரன்களை குவித்துவிட்டால் சந்தோஷத்தில் குதிக்கிறார். இது குறித்த 14 வினாடி வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் ஒவ்வொருவரின் கடைசி மூச்சிலும் இருப்பதாக பலர் கமென்ட் போடுகிறார்கள். கிரிக்கெட் கிடைத்ததற்கு இந்தியாவும் இந்தியர்களும் அதிர்ஷ்டசாலிகள் என நெட்டிசன்கள் கமென்ட் கொடுக்கிறார்கள்.

தாத்தா எனர்ஜி
தாத்தாவின் எனர்ஜி லெவலுக்கு ஈடு இணையே இல்லை என்கிறார்கள். விளையாட்டுக்கு வயது எப்போதும் தடையில்லை என்பதற்கு இந்த முதியவரின் வீடியோ ஒரு சான்றாகும். கடந்த ஆண்டு 97 வயதான லியோனிட் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி கிராண்டஸ்லாம் சாம்பியன் ரஃபேலுடன் டென்னிஸ் விளையாடினார். இந்த வீடியோவும் இணையதளத்தில் பாராட்டுகளை பெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications