"ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு 81% இந்தியர்கள் ஆதரவு.." ராம்நாத் கோவிந்த் குழு தகவல்! இது ஏன் முக்கியம்
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பரிந்துரைகளை நாட்டு மக்களிடம் இருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவே பெற்று வருகிறது. இதற்கிடையே இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல், சட்டசபைத் தேர்தல்கள், பஞ்சாயத்துத் தேர்தல்கள் எனப் பல தேர்தல்கள் நடந்து வருகிறது. இப்படி தொடர்ச்சியாகத் தேர்தல் நடப்பதால் நிர்வாகம் பாதிக்கப்படுவதாகவும் அதிக நிதி செலவாவதாகவும் விமர்சனம் இருக்கிறது.

இதன் காரணமாக நாட்டில் அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பதை ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பது இவர்கள் வாதம்.
பரிந்துரைகள்: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பரிந்துரைகளைப் பெறவும் ஆலோசனை நடத்தவும் மத்திய அரசு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை அமைந்திருந்தது. இந்த குழு பொதுமக்களிடம் இருந்து பரிந்துரைகளைக் கோரி இருந்தன. அதன்படி இந்த குழுவுக்கு இதுவரை 21,000 பரிந்துரைகள் வந்துள்ளன. அதில் 81 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதற்குச் சாதகமான பதிலைக் கொடுத்துள்ளனர்.
அதேபோல 46 அரசியல் கட்சிகளிடமிருந்தும் ஆலோசனைகள் கோரப்பட்டு இருந்த நிலையில், அதில் இதுவரை 17 அரசியல் கட்சிகளிடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறைக்குக் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாட்டில் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான சட்ட-நிர்வாக மாற்றங்களைச் செய்வது குறித்த பரிந்துரைகளை மக்களிடம் பெறக் கடந்த ஜனவரி 5ஆம் தேதி இந்த குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்ட ராம் கோவிந்த் தலைமையிலான குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
81% பேர் ஆதரவு: இதுவரை இந்த குழுவுக்கு மொத்தம் 20,972 பதில்கள் கிடைத்துள்ளன. அதில் 81 சதவீதம் பேர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 15வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், லோக்சபா முன்னாள் செயலாளர் ஜெனரல் சுபாஷ் சி காஷ்யப், முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி எனப் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளையும் இந்த குழு பெற்றுள்ளது.
அடுத்த கூட்டம்: இந்த குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைமைகள், வல்லுநர்களிடம் தொடர்ந்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறது. இந்தக் குழு மீண்டும் ஜனவரி 27ஆம் தேதி கூடுகிறது. இந்தக் குழு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து சட்ட ஆணையத்தின் கருத்துகளையும் கேட்டறிந்தது. மீண்டும் கூட ஒரு முறை அவர்கள் சட்ட ஆணையத்தின் கருத்துகளைக் கேட்டறியவும் வாய்ப்பு உள்ளது.
ஒரே நேரத்தில் லோக்சபா தேர்தல், அனைத்து மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள், பஞ்சாயத்துத் தேர்தல்கள் என்று அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்துவதே இதன் நோக்கமாகும். இதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களைப் பரிந்துரைக்கவே ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications