அதிகாலையில் சரிந்த சிவிங்கி புலிகள்.! 4 மாதங்களில் 8ஆவது சிவிங்கி புலி உயிரிழப்பு.! என்ன நடக்கிறது
டெல்லி: இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் ஆப்பிரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிவிங்கி புலி ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் உயிரிழக்கும் 8ஆவது சிவிங்கி புலி இதுவாகும்.
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் மனிதர்களின் பேராசை பல்வேறு காரணங்களால் காடுகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. பரந்து விரிந்திருந்த காடுகள் இப்போது ஆங்காங்கே சுருங்கிவிட்டன.

இதனால் காடுகளில் வசிக்கும் விலங்குகளுக்கு மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளன. அவை காடுகளில் இருந்து வெளியே வருவதால் மனித மிருக மோதல்களும் ஏற்படுகிறது. முன்பு அவ்வப்போது ஏற்பட்ட மனித மிருக மோதல் என்பது இப்போது அதிகரித்துள்ளது.
சிவிங்கி புலி: இது ஒரு பக்கம் இருக்க மனிதர்களின் நடவடிக்கையால் நாம் பல்வேறு உயிரினங்களை இழந்துள்ளோம். இழந்துள்ளோம் என்று சொல்வதைக் காட்டிலும் மனிதர்கள் பல உயிரினங்களை அழித்துள்ளான் என்பதைச் சரியாக இருக்கும். அப்படித்தான் கட்டுப்பாடற்ற வேட்டை உள்ளிட்ட காரணங்களால் நம் நாட்டில் சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை படுவேகமாக குறைந்து 1950களில் முற்றிலுமாக அழிந்தே விட்டது.
ஒரு காலத்தில் நாடு முழுக்க பல பகுதிகளில் இருந்த சிவிங்கி புலிகள் வேட்டை காரணமாக முற்றிலுமாக அழிந்தேவிட்டது. அவை நாட்டில் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டன. இதனால் மீண்டும் சிவிங்கி புலிகளைக் கொண்டு வர இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. அதன்படி வெளிநாடுகளில் இருந்து சிவிங்கி புலிகளை இறக்குமதி செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தனர்.
12 சிவிங்கி புலிகள்: இதற்காக நீண்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, இதற்காகக் கடந்தாண்டு 12 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. இதுபோல ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து வரப்படும் விலங்குகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும். இவை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வது சந்தேகம் என்றே பலரும் தொடர்ந்து கூறி வந்தனர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகள் மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. இருப்பினும், அவை அந்த சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதில் பல சிக்கல்களைச் சந்தித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே இன்றைய தினம் ம.பி பூங்காவில் உள்ள ஒரு ஆண் சிவிங்கி புலி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
8ஆவது சிவிங்கி புலி: ஆப்பிரிக்கச் சிறுத்தையான சூரஜ், இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. சூரஜ் உயிரிழந்ததற்கான சரியான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் மத்தியப் பிரதேசத்தில் உயிரிழக்கும் 8ஆவது சிவிங்கி புலி இதுவாகும்.
முன்னதாக கடந்த செவ்வாயன்று, மற்றொரு ஆண் சிறுத்தையான தேஜாஸ் உயிரிழந்து கிடந்தது. அங்கிருந்த பெண் சிறுத்தை ஒன்றுடன் நடந்த சண்டையில் ஏற்பட்ட காயத்தில் இது உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.
சிவிங்கி புலிகள்: கடந்த மார்ச் 27ஆம் தேதி சாஷா என்ற பெண் சிவிங்கி புலி சிறுநீரகக் கோளாறால் இறந்தது. ஏப்ரல் 23ஆம் தேதி உதய் கார்டியோ சிவிங்கி புலி நுரையீரல் செயலிழப்பால் உயிரிழந்தது. மே 9ஆம் தேதி தக்ஷா என்ற பெண் சிவிங்கி புலி இனச்சேர்க்கையின் போது ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தது. மே 25இல் நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் இரண்டு சிவிங்கி புலிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி சிவிங்கி புலிகள் தொடர்ந்து உயிரிழப்பது என்பது மத்திய அரசு சிவிங்கி புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது. சிவிங்கி புலிகள் வேகமாக ஓடும் என்ற போதிலும் அவற்றுக்கு அந்தளவுக்கு வலிமை இல்லை. சிங்கம், யானை போன்ற விலங்குகளால் அவை கொல்லப்படும் வாய்ப்புகள் மிக அதிகமாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications