இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 96.43 கோடி
டெல்லி: இந்தியாவில் இதுவரை 96.43 கோடி எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,844 குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3.33 கோடியாகும். அதாவது குணமடைந்தோரின் எண்ணிக்கை 98.06 சதவீதமாக இருக்கும்.

அது போல் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 7,823, மகாராஷ்டிராவில் 2,069, தமிழ்நாட்டில் 1,289, மிசோரத்தில் 1,224 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.40 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது 2.07 கோடி பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மத்திய மாநில அரசுகளின் முயற்சிகலால் கடந்த 108 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,23,399 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 58.63 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனாவை வெல்ல தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். அதன்படி இந்தியாவில் இதுவரை 96.43 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 44 வயதினர் வரை 38.88 கோடி பேருக்கு முதல் டோஸும், 10.57 கோடி பேர் இரண்டாவது டோஸும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
அது போல் 45 வயது முதல் 59 வயது வரையில் 16.66 கோடி பேர் முதல் டோஸையும் 8.44 கோடி பேர் இரண்டாவது டோஸையும் செலுத்திக் கொண்டனர். இதையடுத்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 10.51 கோடி பேர் முதல் டோஸையும் 6.03 கோடி பேர் இரண்டாவது டோஸையும் செலுத்திக் கொண்டனர்.
வாராந்திர தொற்று உறுதியானது (Weekly Positivity Rate) கடந்த 110 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே நீடித்து, தற்போது 1.46 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி தற்போது விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 127 நாட்களாக 5 சதவீதத்திற்கு கீழேயும் 44 நாட்களாக 3 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications