ஆப்டிக்கல் இல்யூஷன்.. நெட்டிசன்களை ‘வாவ்’ போட வைத்த 3டி மாய புகைப்படம். . அப்படி என்ன இருக்கு இதில்?
புதுடெல்லி: ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒரு 3 டி டிராயிங் படம் தற்போது சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கான லைக்குகளை வாரி குவித்து வருகிறது.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் தனி வரவேற்பு உள்ளது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை பொதுவாக நாம் முதலில் பார்க்கும் போது ஒரு படம் தெரியும்.

அறிவுத்திறனை சோதிக்கும் பரிசோதனை
ஆனால் அதை நாம் உற்று நோக்கி கவனம் செலுத்தி பார்த்தால் அதில் உண்மையாக மறைந்து கிடக்கும் படங்களை நம்மால் கண்டறிய முடியும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை கொண்டு ஒருவரின் கேரக்டர், ஐகியூ திறன் ஆகியவற்றை ஓரளவுக்கு கண்டறிந்து விடும் எனவும் சொல்லப்படாமல் இல்லை. இதனால், இது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களின் மூழ்கி கிடக்கும் நெட்டிசன்களின் அறிவுத்திறனை சோதிக்கும் ஒரு பரிசோதனையாக வலம் வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன்கள்
இதனால், நெட்டிசன்கள் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களை விரும்பி பகிர்ந்து வருவது வழக்கம். இது போக சில தேர்வுகளில் கூட ஆப்டிகல் இல்யூசன் படங்கள் கேள்விகளாக இடம் பெறும் போக்கும் காணப்படுகிறது. மூளையை கசக்கி பிழிவதோடு, நமது கண்களையே நம்மால் நம்ப முடியாத அளவுக்கு கலங்க வைக்கும் பல ஆப்டிகல் இல்யூஷன்கள் பல உள்ளன. இப்படிப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்றுதான் கடந்த சில தினங்களாக இணைய உலகில் வைரல் ஹிட் அடித்து வருகிறது.

3டி வரைபடம்
சுற்றிலும் செடி கொடிகள் என வனப்பகுதி போல காணப்படும் இடத்தில் நீண்டு நெடியதாக வளர்ந்த மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் ஒட்டப்பட்ட காகிதத்தில் ஒருவர் மிகவும் நேர்த்தியாக படம் வரைந்து கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் நமது கண்களையே நம்மால் நம்ப முடியாத அளவுக்கு தத்ரூபமான ஒரு 3டி வரைபடம் அதில் தென்படுகிறது. மரத்தின் நடுவே ஒரு பந்தில் அழகான ஒரு பெண் நிற்பது போலவும் அவரது தலைக்கு மரம் வட்டமிடுவது போலவும் மிகவும் அழகாக வரைந்து பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார். படத்தை வரைந்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

ஒளியியல் மாயைதான்
இந்த படத்தை பார்த்து மிரண்டு போன நெட்டிசன்கள் பலரும் ஓவியரின் திறமையை வியந்து பாராட்டி வருகின்றனர். மரம் இரண்டு துண்டுகளாகவும் நடுவில் பெண் ஒருவர் நிற்பது போலவும் காட்சிகள் புலப்படுவதை பார்த்து வியந்த பலரும் உண்மையாகவே இது ஒளியியல் மாயைதான் என்று பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் இந்த வீடியோ 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து டிரெண்ட் ஆகி வருகிறது. லட்சக்கணக்கான லைக்குகளையும் வாரி குவித்து வருகிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications