விவசாயிகள் போராட்டம் நடைபெறும் ஹரியானா எல்லையான கன்வரில் விவசாயி தற்கொலை.. உருக்கமான தகவல்
டெல்லி: பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த 53 வயதான விவசாயி குர்மீத் சிங் என்ற விவசாயி, பஞ்சாப் ஹரியானா எல்லையில் உள்ள கானவுரி போராட்ட தளத்தில் தற்கொலை செய்து கொண்டார். நிலமற்ற விவசாயியான குர்மீத் சிங், எலக்ட்ரீஷியனாக பல மாதங்களாக பணிபுரிந்து வந்த நிலையில், இன்று உயிரை மாய்த்துக் கொண்டார், இந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ 2.0 போராட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் மேற்கொண்டனர். இதற்காக டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் நீண்ட கால போராட்டத்திற்கு தேவையான பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர்களில் பேரணியாக டெல்லி நோக்கி வந்தார்கள்.

ஆனால் அப்படி வந்த ஏராளமான விவசாயகிளை பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கனவுரி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இதனால் விவசாயிகள் அங்கேயே கூடாரங்கள் அமைத்தும், டிராக்டர்களை கூடாரமாக மாற்றியும் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் விவசாயிகளை தடுப்பதற்காக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் தூதியன்வாலி கிராமத்தில் வசிக்கும் 53 வயதான விவசாயி குர்மீத் சிங் என்பவர், கடந்த பிப்ரவரி 13ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கானவுரி போராட்ட தளத்தில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
நிலமற்ற விவசாயியான குர்மீத் சிங், எலக்ட்ரீஷியனாகவும் பணிபுரிந்து வந்துள்ளார்., அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.
ஏக்தா சித்துபூரைச் சேர்ந்த ஒரு விவசாயி பல்தேவ் சிங் சந்தோஹா இந்த தற்கொலை குறித்து கூறுகையில்,, குர்மீத் தனது நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தை கட்ட முடியாமல் நிதி நெருக்கடியில் இருந்தார் இதனால் இறந்து போயிருக்கலாம் என்றார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது மகன் திருமணத்தில் கலந்துகொள்ளவதற்கு கூட கிராமத்திற்கு செல்லவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயி குர்மீத், முகாம் விடுதியில் தங்கியிருந்த பகுதியில் காலை 8 மணியளவில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே குர்மீத், தூதியன்வாலி கிராமத்தை சேர்ந்தவர் என்றாலும், மான்சா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். உயிரிழந்த அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவலை பாட்டியாலா மாவட்டம், பத்ரானில் உள்ள தருவா எஸ்ஐ உறுதிப்படுத்தினார்.
இதனிடையே சமனா சிவில் மருத்துவமனையில் நாளை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்பின்னர் அவரது சொந்த கிராமத்தில் உடல் தகனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் பி.கே.யு. (சித்துபூர்) சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications