வீட்டின் கழிவறையில் உஷ் உஷ் சத்தம்.. இருக்கைக்குள் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு
டெல்லி: டெல்லி அடுத்த குருகிராமில் உள்ள கார்வால் கலான் பகுதியில் ஒரு வீட்டின் கழிப்பறை இருக்கைக்கு அடியில் 6 அடி நீளமுள்ள மூக்குக்கண்ணாடி நாகம் ஒன்று மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு ஊழியர் அனில் கந்தாஸ் கழிவறை இருக்கையை கவனமாக உடைத்து பாம்பினை மீட்டார்..
பாம்புகள் எலிகள் அதிகம் உள்ள பகுதிகளில் தான் வரும். எலிகளை தேடி வரும்போது சில நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து விடுவது உண்டு. அப்படி புகுந்துவிடும் பாம்புகள் பாதுகாப்பான வசிப்பிடங்களாக நினைத்து கழிவறை, கட்டிலுக்கு அடியில் அல்லது கற்குவியல், புதர்கள் போன்றவற்றில் மறைந்து வாழும்.

தனக்கு ஆபத்து அல்லது அச்சுறுத்தல் என்று வரும்போது உடனே அவை சீறத் தொடங்கும். தன்னைப் பிடிக்க வருபவர்கள் அல்லது தன்னை தாக்குவார்கள் என்று பயந்தால் உடனே அவர்களை கடிப்பதற்கு பாம்பு பாய்ந்து விடும். இதில் கண்ணாடி விரியன் கட்டுவிரியன் போன்றவற்றை விட நாகப்பாம்பு அதிகமாக வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அப்படித்தான் டெல்லி அடுத்த குரு கிராம் பகுதியில் நாகப்பாம்பு ஒன்று ஒரு வீட்டில் புகுந்துள்ளது.
குருகிராம் சைபர் சிட்டியில் உள்ள கடௌலி கலான் கிராமத்தில், ஒரு வீட்டின் குளியலறையில் உள்ள கழிவறை இருக்கைக்குள் இருந்து சீறும் சத்தம் கேட்டபோது அங்கு சீறு ம் சத்தமும் உஸ் உஸ் என்ற சத்தமும் கேட்டது. இந்த சத்தத்தை கேட்ட அந்தக் வீட்டில் வசிப்பவர்கள், உடனடியாக கழிவறைக்கு சென்று பார்த்தனர். அங்கு ஒன்றுமே இல்லை. ஆனால் இருக்கைக்கு அடியில் சப்தம் வந்து கொண்டே இருந்தது .
இதையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு ஊழியர் அனில் கந்தாஸை அந்த வீட்டில் உள்ளவர்கள் அழைத்தனர். அவர் வந்து கழிவறையை ஆய்வு செய்த போது, சிறிய வால் பகுதி மட்டும் சின்ன பொந்துக்குள் தெரிந்தது. அதனைப் பார்த்த அவர், கழிவறையை உடைக்க முடிவு செய்தார். கழிவறையில் கால் வைக்கும் பகுதியை உடைத்து பார்த்த போது நாகப்பாம்பு சீறியபடி வெளிய வந்தது . அதனை பத்திரமாக பிடித்த அணில் கந்தாஸ், அதனை காட்டு பகுதியில் கொண்டு போய் விட்டார்.
குரு கிராம் பகுதியில் நகரமயமாக்கல் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் புகுவது அதிகரித்து வருகிறது. உணவு பொருட்களை கண்ட இடங்களில் வீசி எறிவது அல்லது துர்நாற்றத்துடன் அவற்றை அப்படியே வைத்திருப்பது போன்றவை எலிகளை ஈர்க்கிறது. உடனே எலிகள் உணவை தேடி வருகின்றன. அப்படி எலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்தால் அந்த வீடுகளுக்கு கண்டிப்பாக பாம்புகள் வருகின்றன. அப்படித்தான் குருகிராமில் பாம்பு வந்துள்ளது என வனவிலங்கு பாதுகாப்பு ஊழியர் அணில் கந்தாஸ் கூறினார். மழைக்காலங்களில் பாம்புகள் வீடுகளுக்கு புகுவது அதிகரித்துள்ளதாகவும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


Click it and Unblock the Notifications
