கேர்ள் பிரண்டு கோவிச்சிக்கிட்டா! நீ ஏன் லஞ்ச் சாப்பிடலைனு கேட்ட தாய்! பிளேட்டை திருப்பி போட்ட வாண்டு
டெல்லி: ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பிய லஞ்ச்சை ஏன்டா சாப்பிடலைன்னு கேட்டா இந்த பொடியன் என்னா பதில் சொல்லி வச்சிருக்கான் பாருங்க! முளைச்சி 3 இலை விடலை!
குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெரிய வேலை. இவர்கள் சாப்பிட்டால் அண்ட சராசரமே சாப்பிட்டது போல்! அந்த அளவுக்கு ஒரு வாய் சாதத்தை ஊட்ட தாய்மார்கள் படாத பாடுபடுகிறார்கள். அதிலும் பள்ளிகளுக்கு கொடுத்தனுப்பும் போது அவர்களுக்கு பிடித்த உணவுகளை கொடுத்தால்தான் சாப்பிடுவார்கள்.

இல்லாவிட்டால் கொடுத்த லஞ்ச் பாக்ஸ் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வந்துவிடும். சில வாண்டுகள், லஞ்சுக்கு என்ன ஸ்னாக்ஸுக்கு என்ன என கேட்டுவிட்டுதான் பள்ளிக்கு ரெடியாவார்கள். இல்லாவிட்டால் முந்தைய நாள் இரவே மெனுவை கூறிவிடுவார்கள்.
தங்களுக்கு பிடிக்காத உணவை கொடுத்துவிட்டால் போதும், போகும் போதே நான் லஞ்ச்சை சாப்பிடவே மாட்டேன் என சொல்லிவிட்டுத்தான் செல்வார்கள். சரி! அப்படித்தான் சொல்வார்கள், பள்ளிக்கு சென்றால் அங்கு மற்ற குழந்தைகளுடன் உட்கார்ந்து கொண்டு எப்படியும் சாப்பிட்டு விடுவார்கள் என நினைப்போம். ஆனால் குழந்தைகள் எப்போதுமே ஸ்மார்ட்!
நாம் நினைப்பதற்கு எதிர்மறையாகவே செயல்படுவார்கள். மிஸ்ஸிடம் படிக்க சொல்லிக் கொடுங்கள் என சொன்ன காலம் போய் என் குழந்தையை நன்றாக சாப்பிட வைங்க என சொல்லும் காலம் வந்துவிட்டது. இணையத்தில் தாய்க்கும் மகனுக்குமான ஒரு உரையாடல் காமெடியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தாய் வழக்கம் போல் தனது மகனுக்கு பள்ளியில் சாப்பிடுவதற்கு மதிய உணவை கொடுத்து அனுப்பினார். அதனுடன் தாய், பாசத்தில் I Love you Babe என எழுதி லஞ்ச் பேக்கில் போட்டிருந்தார். பள்ளி முடிந்து வீடு திரும்பியதுமே தாய், தனது மகன் லஞ்ச்சை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டானா என சோதனை செய்கிறார்.
அப்போது அந்த தாய்க்கு அதிர்ச்சி! லஞ்ச் பாக்ஸ் பேக் செய்தது செய்ததாகவே இருந்ததே தவிர அதிலிருந்து ஒரு பருக்கை கூட காலியாகவில்லை. இதையடுத்து சிறுவனை அழைத்து ஏன் மதிய உணவு சாப்பிடவில்லை என கேட்டார். அதற்கு அந்த சிறுவன் திடீரென சோகமடைந்தான்.
உடனே தாய், என்னாச்சு, லஞ்ச் பிடிக்கலையா? என கேட்டார். அதற்கு அந்த சிறுவன், "என் லஞ்ச் பேக்கில் நீங்கள் ஐ லவ் யூ பேபி என எழுதியிருந்தீர்கள் அல்லவா, அதனால்தான் நான் சாப்பிடவில்லை" என்றான். அந்த தாய்க்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு துருவி துருவி கேட்ட போது பொடியன் என்ன சொன்னான் தெரியுமா?

"நீங்கள் கொடுத்த லஞ்ச்சை ஆசையாக சாப்பிட எடுத்தேன். அப்போது நீங்கள் எழுதிய ஐ லவ் யூ பேபி என்ற மெசேஜை பார்த்தேன். அதை என் கேர்ள் பிரண்டும் படித்துவிட்டு சோகம் ஆகிவிட்டாள்! அவள் அப்செட் ஆனதால் நான் லஞ்ச்சை சாப்பிடவில்லை என சொன்னான்". தாய் விழுந்து விழுந்து சிரித்தார். இதை அந்த சிறுவனிடம் மீண்டும் கேட்டு அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சிறுவன் எவ்வளவு ஒளிவுமறைவு இல்லாமல் பேசுறானே என நெட்டிசன்கள் பாராட்டுகிறார்கள்.
முளைக்கும் போதே கேர்ள் பிரண்ட்டா? என்கிறார்கள். இன்னும் சிலர் போச்சு தனக்கு பிடித்த பையனை இன்னொரு பெண்ணும் (தாய்) விரும்புகிறார் என தெரிந்தால் அந்த பெண்ணின் மனம் எத்தனை பாடுபடும் என்கிறார்கள். நல்ல பொண்ணுப்பா, அந்த பையனோட அம்மாகிட்ட குடுமி சண்டை போடாம பையன்கிட்ட கோபப்பட்டுட்டாளே என்கிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications