குடிபோதையில் கார் ஓட்டி வந்து பெண் மீது மோதிய எஸ்.ஐ - தரதரவென இழுத்துச்சென்ற வீடியோ வைரல்

டெல்லியில் வேகமாக கார் ஒன்று இளம்பெண் மீது மோதி அந்த பெண்ணை தரதரவென இழுத்துச்செல்லும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பரபரப்பான நகர் பகுதியில் வேகமாக வந்த கார் மோதி இளம் பெண் ஒருவரை தூக்கி வீசியதோடு தரதரவென காரில் இழுத்துச்செல்வதைப் பார்த்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் டெல்லியில் சில்லா கிராமம் அருகே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை நேரில் பார்த்தவர்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அந்த காரை ஓட்டி வந்தவர் சப் இன்ஸ்பெக்டர் என்பதும், காரை ஒட்டி வந்த போது குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இளம்பெண் மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

டெல்லி சில்லா கிராமத்தின் அருகே சாலையில் பொதுமக்கள் பரபரப்பாக நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டார். அதனை அதிர்ச்சியோடு பார்த்த பலரும் அந்த பெண்ணை தூக்க முற்பட்டனர். அப்படி இருந்தும் அந்த கார் மீண்டும் அந்த பெண் மீது ஏறி தரதரவென இழுத்துச்சென்றது.

A car ran over a woman near Chilla Village in Delhi

அங்கிருந்தவர்கள் காரை விரட்டி பிடித்தனர். இந்த சம்பவம் அந்த ஏரியாவில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் காரை ஓட்டி வந்தவர் குடி போதையில் இருந்திருப்பது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவர் சப் இன்ஸ்பெக்டர் என்பதும் தெரியவந்தது.

A car ran over a woman near Chilla Village in Delhi

பெண் மீது மோதி விட்டு காரை நிறுத்தாமல் சென்ற அந்த குடிகார சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதுமே இப்போது காவல்துறையினருக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது.

A car ran over a woman near Chilla Village in Delhi

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+