வயித்துல புள்ளய வச்சிகிட்டு மட்டையாகிடுச்சே! மதுபானக் கடையில் Raw-வாக அடித்த கர்ப்பிணி குரங்கு!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் மதுபான கடைக்குள் புகுந்த கர்ப்பிணி குரங்கு ஒன்று அங்கிருந்த மதுபான பாட்டிலை உடைத்து குடித்துவிட்டு கடையிலேயே மட்டையான சம்பவம் வைரலாகி வருகிறது.

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம் ஓர்மான்ஜி பிளாக் சௌக் பகுதியில் மதுபானக் கடை இயங்கி வருகிறது. நேற்றைய தினம் இங்கு வந்த கர்ப்பிணி குரங்கு அங்கு அது சாப்பிட ஏதாவது இருக்கிறதா என தேடியது.
எதுவும் இல்லாத நிலையில் அங்கிருந்த மதுபானத்தை திறக்க முயற்சித்தது. முயற்சித்ததுமே திறந்ததால் குரங்குக்கு அத்தனை மகிழ்ச்சி! வயிற்றில் புள்ளைகளை சுமந்து கொண்டு கஷ்டப்பட்டு கடைக்குள் வந்தது வீண் போகவில்லை என குரங்குக்கு மனதில் அத்தனை மகிழ்ச்சி!
மதுபான குவார்ட்டர்
இதையடுத்து அந்த மதுபான குவார்ட்டர் பாட்டிலை குடித்தது. அப்போது குரங்கிற்கு கிர்ரென தலைச் சுற்றியது. இதையடுத்து குடித்தது போதும் என கருதிய குரங்கு பாட்டிலில் 10 சதவீத மதுவை அப்படியே வைத்துவிட்டது. பின்னர் அங்கிருந்து செல்லலாம் என முயற்சித்த போது குரங்குக்கு எல்லாமே இரட்டை இரட்டையாக தெரிந்தது போலும்!
ஒரு கட்டத்தில் அக்குரங்காமல் நடக்கவே முடியவில்லை, ஏதோ சாய்வில் நடப்பது போல் இருந்தது. உடனே அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளின் மேலே படுத்துக் கொண்டது.
கடை ஊழியர்கள்
இதையடுத்து அங்கு வந்த கடை ஊழியர்கள் குரங்கை விரட்ட அதை எழுப்பி பார்த்தனர். பிறகுதான் தெரிந்தது அது மதுவை குடித்திருக்கிறது என்பது! கடைக்குள்ளேயே சிறிது நேரம் தூங்கிய அந்த குரங்கு, யார் எழுப்பினாலும் அரை கண்ணில் பார்த்துவிட்டு தூங்கிவிட்டது.

இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த குரங்கு கண் விழித்து பார்த்தது, அப்போது தெளியவில்லை, "என்ன கருமத்தை குடிச்சோம்னு" தெரியலையே என நினைத்து மீண்டும் தூங்கியது. பின்னர் ஒரு வழியாக எழுந்தது. ஆனால் போதை தெளியவில்லை.
மட்டையான குரங்கு
இதையடுத்து அங்கிருந்த பாட்டில்களை உடைத்து தள்ளியது. அப்போது அந்த குரங்கை விரட்ட முயன்ற கடை ஊழியர்களை கடித்து குதறியது. இதையடுத்து காவல் துறையை வரவழைத்த ஊழியர்கள், அருகில் இருந்த பகவான் பிர்சா உயிரியல் பூங்காவிற்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பூங்கா ஊழியர்கள், கடுமையான போராட்டத்திற்கு பிறகு போதையில் தலைக்கால் புரியாமல் ஆடிய குரங்கை மீட்டு அதற்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மது பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை குரங்கு படிக்கவில்லையா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
ம.பி.யிலும் குரங்கு சேட்டை
கடந்த 2021 ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் மண்ட்லா எனும் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று கடையின் கவுன்ட்டரில் இருந்த மதுபாட்டிலை திறந்து குடித்துவிட்டது. கடைக்காரர் அதற்கு பிஸ்கட் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டது.
அது போல் உத்தரப்பிரதேசத்தில் மிர்சாபூரில் ஒரு மந்திரவாதியால் மதுவுக்கு அடிமையாக்கப்பட்ட கலுவா என்ற குரங்கு, அந்த மந்திரவாதி இறந்ததால் மது கிடைக்காமல் வெறி பிடித்து 200-க்கும் மேற்பட்ட மனிதர்களை கடித்தது. இதையடுத்து அந்த குரங்கு பிடிக்கப்பட்டு கான்பூர் உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டது.
பிரேசிலில் ரம் அடித்த குரங்கு
அது போல் பிரேசலில் மதுபானக் கடைக்குள் புகுந்த ஒரு குரங்கு அங்கிருந்த ரம்மை குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு அங்கிருந்த மக்களை அச்சுறுத்தியது. பிறகு தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து அந்த குரங்கை மீட்டனர்.




Click it and Unblock the Notifications
