இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலிவுட் பட உலகில் தனக்கு எதிராக ஒரு கும்பல் தனக்கு எதிராக செயல்படுகிறது என்று இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்க இவர் பேட்டி பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் உலகில் நடக்கும் உள் அரசியல் குறித்த நிறைய தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் வரிசையாக பலரும் முன்வந்து தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் ரகுமான் அதேபோல் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களைகுறிப்பிட்டுள்ளார்.

இசை அமைப்பாளர் ரகுமான்

இசை அமைப்பாளர் ரகுமான்

இசை அமைப்பாளர் ரகுமான் அளித்த பேட்டியில், இந்தி படங்கள் பெரிய அளவில் எனக்கு சமீப நாட்களாக வரவில்லை. இது தொடர்பாக யோசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் டில் பேச்சாரோ இயக்குனர் சொன்ன பின்தான் எனக்கு இதற்கான காரணமே தெரியும். டில் பேச்சாரோ இயக்குனர் என்னிடம் வருவதற்கு முன் பலர் என்னை பற்றி அவரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள். ரகுமானிடம் செல்ல வேண்டாம் என்று டில் பேச்சாரோ இயக்குனரிடம் பலர் கூறி இருக்கிறார்கள்.

வேண்டாம் என்று சொன்னார்கள்

வேண்டாம் என்று சொன்னார்கள்

ரகுமான் வேண்டாம். அவர் சரியில்லை. வேறு இயக்குனரிடம் செல்லுங்கள் என்று டில் பேச்சாரோ இயக்குனரிடம் சிலர் சொல்லி இருக்கிறார்கள். டில் பேச்சாரோ இயக்குனர் என்னிடம் இதை பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன பின்தான் எனக்கு பட வாய்ப்பு வரமால் போனதற்கு காரணமே தெரிந்தது. எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு குழு இயங்குகிறது.

வாய்ப்புகள் மறுப்பு

வாய்ப்புகள் மறுப்பு

எனக்கு வாய்ப்புகளை வர விடாமல் தடுப்பதற்கு என்றே ஒரு குழு பாலிவுட்டில் இயங்குகிறது. எனக்கு கவலை இல்லை. எனக்கு கடவுள் கொடுக்க வேண்டியதை கொடுப்பார். எல்லாமும் கடவுளிடம் இருந்துதான் வருகிறது. எனக்கு தேவையான, தகுதியான வாய்ப்புகள் கண்டிப்பாக வரும். எனக்கு அதை பற்றி கவலை இல்லை, என்று இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன காரணம்

என்ன காரணம்

முன்னதாக டில் பேச்சாரோ நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட போது, அது தொடர்பாக ரகுமான் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். ரகுமான் சுஷாந்த் சிங் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். முன்னதாக சுஷாந்த் சிங் மரணத்திற்கு இதேபோல் வாய்ப்பு மறுக்கப்ட்டதும், அதன் மூலம் அவர் கடும் அழுத்தத்திற்கு உள்ளானதும்தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+