பாஜகவின் முக்கிய தலைவரை சந்தித்த நயன்தாரா.. கட்சியில் சேர அழைப்பு.. கோவிலில் நடந்த பரபர சம்பவம்!

பாஜகவில் சேரும்படி நடிகை நயன்தாராவிற்கு பாஜகவின் மூத்த தலைவர் நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவில் சேரும்படி நடிகை நயன்தாராவிற்கு பாஜகவின் மூத்த தலைவர் நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக பாஜகவில் தற்போது வரிசையாக பிரபலங்கள் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் பாஜகவில் பிரபல நடிகை நமீதா இணைந்தார். அதன்பின் பாஜகவில் ராதா ரவி இணைந்தார்.

இந்த பாஜக கட்சி மேலும் சில பிரபலங்களை கட்சிக்குள் சேர்க்க முயன்று வருகிறது. முன்னணி சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை சேர்க்க பாஜகவின் முயன்று வருகிறார்கள். பாஜகவில் ஏற்கனவே இருக்கும் திரை பிரபலங்கள் இதற்காக முயன்று வருகிறார்கள்.

எப்படி பாஜக

எப்படி பாஜக

இந்த நிலையில்தான் நடிகை நயன்தாரா பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் எம்பி நரசிம்மன் உடன் சந்திப்பு நடத்தினார். நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நயன்தாரா சென்று இருந்தார். அங்குதான் அவர் நரசிம்மனை சந்தித்துள்ளார்.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இதையடுத்து நரசிம்மன் நேரடியாக சென்று நயன்தாரா உடன் பேசினார். தன்னை அறிமுகப்படுத்திய நரசிம்மன், தன்னுடைய குடும்பத்தினரையும் அறிமுகம் செய்து வைத்தார் . நயன்தாரா அவர்களிடம் சுமார் 25 நிமிடம் தொடர்ந்து பேசினார்.

பாஜகவில் அழைப்பு

பாஜகவில் அழைப்பு

இதையடுத்து நயன்தாராவை பாஜகவில் சேரும் படி நரசிம்மன் அழைத்து இருக்கிறார். எங்கள் கட்சியில் இணைந்து விடுங்கள். மக்களுக்கு சேவை செய்ய முடியும் . உங்களுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கும் என்று அவர் நயன்தாராவை அழைத்து இருக்கிறார்.

பதில்

பதில்

ஆனால் இதற்கு நயன்தாரா என்ன பதில் அளித்தார் என்பது தொடர்பாக விவரம் வெளியாகவில்லை. இதற்கு நயன்தாரா வெளிப்படையாக மறுப்போ ஏற்போ தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.இதனால் கூடிய விரைவில் நயன்தாராவுடன் பாஜகவின் பெண் தலைவர்கள் சந்திப்பு நடத்த வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+