இந்த மேரேஜ் இன்விடேஷனை பாருங்க! திருமணத்திற்கு போலாமா வேண்டாமா சொல்லுங்கள்!
டெல்லி: திருமண அழைப்பிதழில் சின்ன திருத்தங்கள் இருக்கும் பார்த்திருக்கிறோம்.. ஆனால் அர்த்தமே மாறும் அளவுக்கு மிகப்பெரிய மிஸ்டேக் நடந்துள்ளதை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா?
திருமணம் என்றாலே அங்காளி பங்காளி சண்டையில்லாமல் பெரும்பாலும் நடக்காது என்பார்கள். என் பெயரை போடலை, அவன் பெயருக்கு கீழே என் பெயரா, இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு நானும் பார்க்கிறேன் என நிறைய பேர் ரவுசு விட்டிருப்பதை பார்த்திருப்போம்.
ஆனால் ரவுசு விட்ட நபர்தான் திருமணத்தில் பம்பரம் போல் பணியாற்றுவார். அவருக்கே தெரியும், பெண்ணோட பெற்றோரோ மாப்பிள்ளையோட பெற்றோரோ வராவிட்டால் கூட இந்த திருமணம் நடக்கும் என்று!

சில இடங்களில் பந்தியில் சாம்பார் சாப்பிட்டதும் பாயாசம் ஊற்றி விட்டார்கள் என சண்டை நடக்கும், முதல் பந்தியில் இருந்த லட்டு இந்த பந்தியில் ஏன் இப்படி இருக்கிறது.. கடனை உடனை வாங்கி திருமணம் செய்தால் இப்படியெல்லாம் சிலர் பிரச்சினைகளை இழுத்து விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். திருமணத்தில் சண்டை ஒரு புறம் இருந்தாலும் புத்தாடைகள், பிரம்மாண்ட அலங்காரம், உணவு என எல்லாம் சிறப்பாக இருக்கும்.
இதற்காக இரு வீட்டாரும் மெனக்கெட்டு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வர். அது போல் திருமண அழைப்பிதழுக்கு தனிக்கவனம் செலுத்துவார்கள். திருமணத்திற்கு பிள்ளையார் சுழியே திருமண அழைப்பிதழ்கள்தான். அந்த திருமண அழைப்பிதழ்களில் நிறைய விதமான தவறுகளை நாம் பார்த்துள்ளோம்.
பிரிண்டிங்கில் திருமண அழைப்பிதழ் டிசைன் செய்து அதற்கு ப்ரூப் பார்க்க மணமக்கள் வீட்டாரிடம் நகல் கொடுக்கப்படும். அதை பார்த்து திருத்தம் இருந்தால் அதை திருத்த சொல்லிவிடுவர். இல்லாவிட்டால் அச்சடிக்க சொல்லிவிடுவார்கள். அந்த வகையில் ஒரு திருமண அழைப்பிதழில் உள்ள ஒரு மிஸ்டேக்கால் பெரிய குழப்பமே நடந்துள்ளது.
ஒருவர் தனக்கு தெரிந்தவர்களுக்கு திருமண பத்திரிகையை கொடுத்து அவசியம் குடும்பத்துடன் வந்துவிடுமாறு கூறியுள்ளார். அவர் போன பிறகு திருமண அழைப்பிதழை பார்த்தால் ஷாக்! அதில் திருமணத்திற்கு அனைவரும் மறக்காமல் வாருங்கள்" என்பதற்கு பதிலாக திருமணத்திற்கு வருவதை மறந்துவிடுங்கள் என "அன்புடன்" கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த பத்திரிகை தற்போது வைரலாகி வருகிறது. இந்த தவறை பிரிண்டிங் பிரஸ்தான் செய்துள்ளது. ஆனால் இதை ப்ரூப் பார்க்கும் போது மாற்றியிருக்கலாம். மணமக்கள் பெயர், திருமண தேதி, இடம், நேரம், அங்காளி பங்காளி பெயரை மட்டும் பார்த்துவிட்டு அப்படியே அச்சடிக்க கொடுத்துவிட்டனர். இதனால் இந்த பத்திரிகையை பார்த்துவிட்டு திருமணத்திற்கு வர சொல்கிறார்களா, இல்லை வேண்டாம் என்கிறார்களா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு இரு வேறு விமர்சனங்கள் வருகின்றன. அதில் வேலை பரபரப்பில் கல்யாண ஏற்பாடுகளில் இப்படி குளறுபடி ஆகலாம். இதெல்லாம் கவனக்குறைவுதான். இதை பெரிதுப்படுத்தாமல் திருமணத்திற்கு செல்வதுதான் நல்லது என நெட்டிசன்கள் அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். பொதுவாக திருமண அழைப்பிதழில் மொய்களும் அன்பளிப்புகளும் வேண்டாம் என அச்சடிக்கப்பட்டிருக்கும். இதற்கு காரணம் ! அவர்கள் செய்தால் நாமும் செய்ய வேண்டும். எதற்கு பதிலுக்கு பதில் என்பதால் அது போல் சிலர் அச்சடிக்கிறார்கள். ஆனால் இந்த திருமணத்திற்கு வருவதை மறந்துவிடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் குழப்பத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications