மக்களவை தேர்தலில் வந்தாச்சு புதிய தொழில்நுட்பம்.. cVigil app என்றால் என்ன? எதற்கு பயன்படுத்துவது?
டெல்லி: மக்களவைத் தேர்தலில் புதிய தொழில்நுட்பமான cVigil App பயன்படுத்த போகிறோம் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி மக்களவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்க இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறுகையில் லோக்சபா தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். லோக்சபா தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். இந்த ஆண்டின் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான்.
நாடு முழுவதும் வன்முறை இன்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் 1.82 கோடி முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் . 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. 85 வயதைக் கடந்த 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
82 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
லோக்சபா தேர்தல் வெளிப்படையான முறையில் நடைபெறும். மிக உயர்ந்த தரத்தில் தேர்தல் நடைபெறும் என்று நான் உறுதியளிக்கிறேன். 100 வயதைக் கடந்த 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டுக்கே சென்று வாக்குகளை பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குடிநீர், கழிவறை, சாய்தள வசதி, வீல் சேர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் தேர்தல் நடத்துவது. காகித தாள் பயன்பாட்டை மிக குறைந்த அளவில் பயன்படுத்துவது, உள்ளிட்டவை ஆகும்.
சிவிஜில் செயலி மூலம் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 27 செயலிகள் உள்ளன. KYC app மூலம் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை அறியலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் இருக்கும். 1905 - என்ற எண் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து புகார் செய்யலாம். குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்த விவரங்களை நாளிதழ்களில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.
ட்ரோன்கள் மூலம் மாநில எல்லைகள் கண்காணிக்கப்படும். தேர்தலில் முடிந்த வரை வன்முறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில மாநிலங்களில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தேர்தலில் பணம் பிரதான பொருளாக உள்ளது. வாக்கிற்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் குற்றம் ஆகும்.
நகை, சேலை என எந்த இலவச பொருட்கள் கொடுப்பதும் குற்றமே. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications