டெல்லி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம்.. பயணியாக வந்தவர்.. பைலட்டாக மாறினார்!
Recommended Video
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் இருந்த நிலையில், அதில் பயணியாக வந்த பைலட் ஒருவர் திடீரென விமானத்தை இயக்கினார். பனிமூட்டம் அதிகமாக இருக்கும் போது சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட்டுகள் இருந்தால் மட்டும் இயக்க அனுமதிக்கப்படும் என்பதால் அவர் அத்தகைய பயிற்சி பைலட் என்பதால், அவரே அமர்ந்து விமானத்தை இயக்கினார்.
பொதுவாக பனிமூட்டம் அதிகமாக இருக்கும் போது வானத்திலிருந்து தரைப்பகுதியை பார்க்க முடியாது.. அப்படிப்பட்ட சூழலில் சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட்டுகள் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம்.அதாவது டிசம்பர் பிற்பகுதியில் பனி மூட்டம் அதிகமாக இருக்கும் போது இத்தகைய பைலட்டுகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். '

பார்க்கும் திறன்
ஆனால் நேற்று முன்தினம் காலையில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் திடீரென பனிமூட்டம் கடுமையாக இருந்தது. அத்துடன் வானத்தில் இருந்து தரைப்பகுதியை பார்க்கும் திறன் குறைவாகவே இருந்தது.

விமானி இல்லை
இந்த சூழலில் புனேவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் (6இ-6541) புறப்பட தயாரானது. அந்த விமானத்தின் பைலட் சிஏடி-3பி பயிற்சி பெறாதவர் ஆவார். அந்த நேரத்தில் விமானத்தில் சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட்டை மாற்றுவது சிரமம் என்கிற நிலை இருந்தது. மேலும் பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படும் நிலை இருந்தது.

அனுபவ விமானி
அந்த நேரத்தில் விமானத்தில் சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட் பயணியாக அமர்ந்து இருந்தார்.இதை அறிந்த விமான நிர்வாகம் அவரை விமானத்தை இயக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. அவரும் சரிஎன்றார்.

சோதனைகள் முடிந்தது
இதையடுத்து விமான போக்குவரத்துறை அதிகாரிகளிடம் விமான நிர்வாகம் அனுமதி கோரியது. இதையடுத்து பைலட்டுகளுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் மது சோதனைகள் முடிந்த பின்னர் விமான அறைக்குள் அவர் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் விமானம் புனேவில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றது.

பயணிகள் ஆச்சர்யம்
இதன் காரணமாக காலை 7.30 மணிக்கு புறப்பட்ட வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக 9.10க்கு புறப்பட்டு சென்றது. சீருடையில் இல்லாத பைலட் திடீரென விமானத்தை இயக்கியதை கண்டு பயணிகள் ஆச்சர்யம் அடைந்தனர். இது மிகவும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications