"மீண்டும் ரிசார்ட் அரசியல்!" நாளை ராஜ்ய சபா தேர்தல்.. இன்று ஹோட்டலில் 'சில்' செய்யும் எம்எல்ஏக்கள்
டெல்லி: நாளைய தினம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சில மாநிலங்களில் மீண்டும் "ரிசார்ட் அரசியல்" தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி விரைவில் காலியாகிறது. இதற்கான தேர்தல் நாளை (ஜூன் 10) நடைபெறும் எனத் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்ய சபா உறுப்பினர் பதவி போட்டியின்றி நிரப்பப்பட்டது. அதில் திமுகவுக்கு 3 இடங்களும், காங்-க்கு ஒரு இடமும், அதிமுகவுக்கு இரு இடங்களும் கிடைத்தது.

ராஜ்ய சபா தேர்தல்
தமிழ்நாட்டைப் போலவே மகாராஷ்டிராவில் 6 இடங்கள் காலியாகும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 11 இடங்கள் பீகாரில் 5 இடங்கள் ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து தலா நான்கு இடங்கள் காலி ஆகிறது. மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து தலா 3 இடங்கள், தெலுங்கானா, சத்தீஸ்கர், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் ஹரியானாவில் இருந்து தலா 2 இடங்கள், உத்தரகாண்டில் இருந்து ஒரு இடம் என மொத்தம் 57 இடங்கள் காலி ஆகிறது. அவர்களில் 41 பேர் 11 மாநிலங்களில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து மீதமுள்ள 16 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான கடும் போட்டி நிலவுகிறது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை ஒவ்வொரு எம்பியை தேர்வு செய்யக் குறைந்தது 42 வாக்குகள் தேவை! ஆளும் எம்.வி.ஏ - சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மூன்று இடங்களை வெல்ல போதுமான வாக்குகள் (151) உள்ளன. இருப்பினும், அவர்கள் நான்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ரிசர்ட் அரசியல்
பாஜகவைப் பொறுத்தவரை மொத்தம் 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களால் இரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும்.. ஆனால் மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆறாவது இடம் யாருக்கு என்பதில் தான் ஆளும் கூட்டணி அரசு பாஜகவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அந்த இடத்தைப் பெற ஆளும் தரப்புக்கு இன்னும் 15 வாக்குகள் தேவை, பாஜக இன்னும் 13 வாக்குகளைத் தேவை. இதனால்தான் முதல்வர் உத்தவ் தாக்கரே, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளை அணுகி வருகிறார். இதன் காரணமாக ஆளும்

ராஜஸ்தான்
ராஜஸ்தானில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 41 வாக்குகள் தேவை. காங்கிரசுக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதாவது அங்கு 3 எம்பிகள் வெல்ல காங்கிரஸுக்கு 123 வாக்குகள் தேவை. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்று உறுதி. இருந்த போதிலும், அவர்கள் பாஜக ஆதரவு பெற்ற ஒருவரைச் சுயேச்சையாகக் களமிறக்கி உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் இப்போது பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், 2 சுயேச்சைகள் மற்றும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செயல்பாடு காங்.-க்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகா
கர்நாடகாவில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 வாக்குகள் தேவை. 121 எம்எல்ஏக்களுடன் இருக்கும் பாஜக இரு இடங்களுக்கு பதிலாக மூன்று வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. 70 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 32 எம்எல்ஏக்களுடன் ஜேடிஎஸ் ஒருவரை களமிறக்கியுள்ளது. அதாவது அங்கு கடைசி இடத்திற்கு தான் அங்கு கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் முறை புதிரானது என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஹரியானா
ஹரியானாவில் காங்கிரஸ் இரு இடங்களை எதிர்பார்க்கிறது. இருப்பினும், காங்கிரஸின் அஜய் மாக்கனுக்கும் பிரபல ஊடக நிறுவனத் தலைவரான கார்த்திகேய ஷர்மாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. கார்த்திகேய ஷர்மாவை பாஜக ஆதரிக்கிறது. எனவே, அங்கும் ஒரு இடத்திற்கு இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications