"வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி.. பாகுபாட்டை உருவாக்கினார்கள்!" - ஆ.ராசா சாடல்
டெல்லி: வந்தே மாதரம் சிறப்பு விவாதத்தில் பங்கேற்றிருந்த திமுக எம்பி ஆ.ராசா, "இந்தியாவில்தான் தேசிய கீதம், தேசிய பாடல் என தனித்தனியாக இருக்கின்றன. தேசிய கீதம் நமது நாட்டை ஒருங்கிணைக்கிறது. பிளவுபட்டிருந்த நாட்டை ஒருங்கிணைக்க தேசிய கீதம் அவசியம். ஆனால் தேசிய பாடலான வந்தே மாதரம், நமது சுதந்திரத்தை பற்றியது, அதன் தாக்கத்தை பற்றியது.வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள்" என்று பேசியுள்ளார்.

நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற மக்களவையில் 10 மணி வரை சிறப்பு விவாதத்தை இன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சித்தார். முஸ்லிம் லீக்-க்கு காங்கிரஸ் அடிபணிந்துவிட்டதாகவும், தேசிய பாடலை துண்டு துண்டாகப் பிரித்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். வந்தே மாதரம் பாடலை முஸ்லீம் லீக் கட்சி எதிர்த்தது. எனவே, இந்த பாடல் இஸ்லாமியர்களை எரிச்சலடைய செய்யலாம் என்று கருதிய நேரு, பாடலை தேசிய கீதமாக ஆக்கவில்லை என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ராசா பேசும்போது, "வந்தே மாதரம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு எதிராகவும் இயக்கப்பட்டது என்று முடிவு செய்வதற்கு வரலாற்றில் காரணங்கள் உள்ளன. சுதேசி போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று இஸ்லாமியர்கள் தடுக்கப்பட்டார்கள். வகுப்புவாதம் இஸ்லாமியர்களால் தூண்டப்படவில்லை. பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே? யாரிடம் உள்ளது என்பதை பற்றி விளக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications