சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம்- உச்சநீதிமன்றத்தில் புதிய மறு ஆய்வு மனுத் தாக்கல்
டெல்லி: சென்னை- சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சேலத்தை சேர்ந்த யுவராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை- சேலம் 8வழி சாலை திட்டத்துக்கு எதிராக 50க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 8-ல் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் நில உரிமையாளர்கள் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளித்தது. இதனிடையே இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சேலம் அயோத்தியாபட்டினத்தை சேர்ந்த யுவராஜ் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை- சேலம் இடையே ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்யலாம் எனவும் புதிதாக நிலம் கையகப்படுத்த தேவையில்லை என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications