பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை.. இந்திய துறைமுகங்களில் இனி நுழைய முடியாது.. மத்திய அரசின் அடுத்த அடி
டெல்லி: இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பல்களுக்கு நுழைய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கப்பல் போக்குவரத்து துறையின் டைரக்டர் ஜெனரல் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தயாராகி வருகின்றனர். நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தான் இன்று கப்பல் போக்குவரத்து துறையின் டைரக்டர் ஜெனரல் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் பாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பல்கள் இந்திய துறைமுகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகத்துக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சொத்துகள், சரக்குகள் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை பாதுகாக்க வணிக கப்பல் சட்டம் 1958 ன் பிரிவு 411 உள்ளது. இந்த பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது பாகிஸ்தானின் வணிக கப்பல்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
முன்னதாக இன்று பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும் மத்திய வணிகத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மறைமுக இறக்குமதி என்பது பாகிஸ்தானின் பொருட்கள் பிற நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வருவதை குறிக்கும்.
தற்போது அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நம் நாட்டுக்கு எந்த பொருட்களையும் பாகிஸ்தான் இனி ஏற்றுமதி செய்ய முடியாது. இது பாகிஸ்தானின் பொருளாதார நிலை என்பது மோசமாக உள்ளது. இப்போது நம் நாடும் பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது என்பதால் அது பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும்.
அதற்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிராக சில முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு கையில் எடுத்தது. அதன்படி சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தம், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது, பாகிஸ்தானியர்களின் சார்க் விசா நிறுத்தம், பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கையை எடுத்தது. அதன்படி 700க்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிந்து நதி நீரை நிறுத்துவதன் மூலம் அந்த நாட்டின் 22 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிந்து நதி நீரை குடிநீராகவும், விவசாயத்துக்காகவும் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்











Click it and Unblock the Notifications