மாலாக்கா ஐ லவ் யூ.. ஆன்லைன் கிளாஸில் பெண் ஆசிரியருக்கு ப்ரபோஸ் செய்த 2கே கிட்
டெல்லி: லவ் ப்ரபோசலில் பல வகை உள்ளது. முன்பு 90ஸ் கிட்ஸ்கள் தங்கள் காதலை ப்ரபோஸ் செய்வதற்கு கூட தைரியம் இல்லாமல் முரட்டு சிங்கில்களாக வந்தனர். ஆனால் 2கே கிட்ஸ்கள் அப்படி இல்லை. அந்த வகையில் ஆன்லைன் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்த பெண் ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் லவ் ப்ரபோசல் செய்த சம்பவம் நடந்துள்ளது.
லவ் ப்ரபோசல் மிகவும் ஸ்பெசலானது. தங்களது காதலை வெளிப்படுத்த ஒவ்வொருவரும் வித்தியாசமான யோசனைகளை வைத்திருப்பார்கள். விமானத்தில் பயணிக்கும்போது வானத்தில் ப்ரபோசல் செய்வது, கப்பலில் அழைத்து சென்று நடுக்கடலில் ப்ரபோசல் செய்வது, விளையாட்டு மைதானங்களில் ப்ரபோசல் செய்வது என்று ஏராளமான லவ் ப்ரபோசல்களை பார்துள்ளோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்தூரில் ஒரு இளைஞர், "ஐ லவ் யூ காவ்யா" என்று காதலியின் பெயருடன் வானில் நூற்றுக்கணக்கான பலூன்களை பறக்கவிட்டு வித்தியாசமாக லவ் ப்ரபோசல் செய்திருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலானது. இதேபோல, ஆனால் சற்று அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு மாணவனின் லவ் ப்ரபோசல் சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
சமீபத்தில் ஒரு ஆன்லைன் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது. இளம் பெண் ஆசிரியர் ஒருவர் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், "மேடம் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா" என்று கேட்டுள்ளான். அதற்கு ஆசிரியர், "இல்லை" என்று பதில் அளித்தார். அந்த மாணவன் உடனடியாக "ஐ லவ் யூ மேம்" என்று ப்ரபோசல் செய்துள்ளான். ஆசிரியர் உள்பட ஆன்லைன் கிளாஸில் இருந்த அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
இருப்பினும் அந்த ஆசிரியர் அதை வெளிப்படுத்தாமல் மிகவும் பொறுமையுடன், "ஐ லவ் யூ ஆல்" என்று சொல்லியுள்ளார். ஆனால் அந்த மாணவன் அடங்கவில்லை. கிளாஸ் தொடர்ந்து கொண்டிருக்கும்போது அந்த ஆசிரியரிடம், "நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா" என்று கேட்டிருக்கிறான். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதற்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். "இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியாது. இதை நினைத்து அவர்கள் அவமானப்பட வேண்டும்" என்று சில கமென்ட்கள் வந்துள்ளது. இன்னும் சிலர், "அந்த வீடியோவில் ஆசிரியரின் முகம் தான் தெரிகிறது. அந்த மாணவனின் முகம் தெரியவில்லை. இதை யாரோ கிரியேட் செய்து பரப்புகிறார்களா" என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இன்னும் சிலர், "அந்த ஆசிரியர் மிகவும் பொறுமையாக, கன்னியமாக நடந்து கொள்கிறார். ஆனால் ஆசிரியர்கள் இதுபோன்ற பேச்சுகளை அனுமதிக்கக் கூடாது. முக்கியமாக மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் இதற்கு அவமானமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஆசிரியர், மாணவனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
"மாணவர்கள் அதிகம் இருக்கும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் இதுபோன்ற வீடியோக்கள் பரவுவது, தவறான முன் உதாரணமாக இருக்கும். எனவே இந்த வீடியோவை நீக்க வேண்டும்." என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதேபோல இந்தாண்டு தொடக்கத்தில் நவநீத் திவாரி என்ற ஆசிரியர், சோனம் ஷர்மா என்ற பெண் ஆசிரியருக்கு ப்ரபோசல் சொல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அப்போதும் அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. "கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்." என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications