கோலார் ’மோடி’ பேச்சு, 2 ஆண்டு சிறை, உச்சநீதிமன்றம் தீர்ப்பு, மீண்டும் எம்பி-ராகுல் வழக்கு ஒரு பார்வை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் இன்று மீண்டும் லோக்சபா எம்.பி. பதவி அவருக்கு கிடைத்துள்ளது. வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி தொடருவார் என லோக்சபா செயலகம் அறிவித்துள்ளது.

ராகுல் காந்தி வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
- 2019 ஏப்ரல் 13: மோடி பெயரை முன்வைத்து கர்நாடகா மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்
- 2023 மார்ச் 23-ந் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- மார்ச் 24-ந் தேதி ராகுல் காந்தியின் லோக்சபா எம்பி பதவி பறிக்கப்பட்டது.
- ஏப்ரல் 3-ந் தேதி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.
- ஏப்ரல் 13-ந் தேதி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 20-ல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.
- ஏப்ரல் 20-ந் தேதி 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
- ஏப்ரல் 25-ந் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்தார்.
- ஜூலை 7-ந் தேதி ராகுல் காந்தியின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
- ஜூலை 15-ந் தேதி, தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.
- ஜூலை 21-ந் தேதி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கு தொடர்ந்த பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
- ஆகஸ்ட் 4-ந் தேதி ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த குஜராத் மாநிலம் சூரத் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 7-ந் தேதி ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை திரும்ப வழங்கி லோக்சபா செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.
More From
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications