மிசாவுக்கு மத்தியில் முகிழ்த்த காதல். ஸ்வராஜை சுஷ்மா கைப்பிடித்த அந்த திரில் தருணம்!
டெல்லி: மிசாவுக்கு மத்தியில் சுஷ்மா ஸ்வராஜுக்கும் ஸ்வராஜ் குஷாலுக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் கரம் பிடித்தனர்.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 67. இவருக்கு கணவர் ஸ்வராஜ் குஷால், மகள் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் உள்ளனர். பன்சூரியும் வழக்கறிஞர் ஆவார்.
சுஷ்மாவுக்கும் குஷாலுக்கும் நடந்தது காதல் திருமணம். கல்லூரி நாட்களில் இருவரும் பழகி திருமணம் செய்து கொண்டு 44 ஆண்டுகள் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். இந்த ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வேண்டாம் என கட்சி தலைமையிடம் தெரிவித்துவிட்டார்.

வழக்கறிஞர்
அதற்கு காரணம் அவர் உடல்நிலை பாதிப்பு என்றாலும் தனது கணவருடன் நேரத்தை செலவிடுவதற்காகவும் அவர் அரசியலில் இருந்து விலக விரும்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களது காதல் கதை குறித்து காண்போம். குஷாலும் சுஷ்மாவை போல் வழக்கறிஞர்.

வேறுபாடுகள்
இருவரும் டெல்லியில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். சுஷ்மா ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை பின்பற்றி வந்தார். ஆனால் குஷாலோ சோசியலிஷ அரசியலை முன்னெடுத்து வந்தனர். எனினும் காதலுக்கு இந்த வேறுபாடுகள் எல்லாம் கிடையாது என்பதால் இருவரும் காதலித்தனர்.

திருமணம்
இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றினர். இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி எமர்ஜென்சி காலத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

பேரதிர்ச்சி
மிசாவுக்கு மத்தியில் இருவருக்கும் முகிழ்த்த காதல் 44 ஆண்டுகள் தொடர்ந்த நிலையில் நேற்று சுஷ்மா மறைந்தார். இது அவரது கணவருக்கும் மகளுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications