‛‛நம்பியார் கால டெக்னிக்’’.. ஆப்பிள் Airpod திருடுப்போவதை தடுக்க இப்படியா? ரொம்ப ஓவர்ங்க இதெல்லாம்
டெல்லி: ஆப்பிள் ஏர்பாட் திருடப்படுவதை தடுக்க, x சோஷியல் மீடியா பயனாளர் ஒருவர் தனது ஏர்பாட்டில் 'மைக்ரோமேக்ஸ்' லோகோவை போன்ற சிம்பிளை பிரின்ட் செய்து வைத்துள்ளார். இது தொடர்பான x தள பதிவு பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
விலையுயர்ந்த பொருட்களுக்கு கள்ள சந்தையில் எப்போதும் மவுசு அதிகம். எனவே இந்த பொருட்கள் அதிக அளவில் திருடப்படுகிறது. இந்த பொருட்களின் வரிசையில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு என தனி டிமாண்ட் இருந்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக ஆப்பிள் மொபைல்கள், ஏர்பாட்கள் உள்ளிட்டவை கள்ள சந்தையில் எப்போதும் நல்ல விலைக்கு போகும் என்பதால், திருடர்களின் பட்டியலில் இது முதல் இடத்தில் இருக்கிறது.

சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற பெரு நகரங்களில் இந்த பொருட்கள் எளிதாக திருடப்பட்டு விடுகின்றன. எனவே இதனை பாதுகாப்பது பெரும்பாடாக இருப்பதாக பயனாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த திருட்டை தடுக்க x சோஷியல் மீடியா பயனாளர் ஒருவர் அற்புதமான ஐடியாவை கொடுத்திருக்கிறார்.
'Baked Samosa' எனும் x சோஷியல் மீடியா பயனர்தான் இந்த ஐடியாவை கொடுத்திருக்கிறார். இவர் நொய்டாவில் வசித்து வருகிறார். இவரது நண்பர்கள் பலர், ஆப்பிள் பிராண்ட் பயனாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் இதேபோன்று பல திருடடு சம்பவங்களால் தங்கள் மொபைல், ஏர்பாட் உள்ளிட்ட கேஜட்ஸ்களை இழந்திருக்கிறார்கள். இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட இவர் தனது ஆப்பிள் ஏர்பாட்டில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் லோகோவை பிரின்ட் செய்து வைத்திருக்கிறார்.
இது தொடர்பான படத்தையும் x தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த ஐடியாவுக்கு சோஷியல் மீடியா பயனாளர்கள் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து அவர் கூறுகையில், "என்னுடைய நண்பர்கள் பலரின் ஆப்பிள் புராடெக்ட் பொருட்கள் அடிக்கடி திருடுபோயுள்ளது. இருப்பினும், என்னுடைய பொருட்கள் இதுவரை திருடப்படவில்லை. இது என்னுடைய அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்" என கூறி, மைக்ரோமேக்ஸ் லோகோ போன்று சிம்பல் பதிக்கப்பட் தனது ஏர்பாட்-ன் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து மற்ற சோஷியல் மீடியா பயனாளர்கள் கூறுகையில், "ஆப்பிள் ஏர்பாட்-ல் சிறப்பு வசதி ஒன்று இருக்கிறது. பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த லோகோவை Airpod-ல் பிரிண்ட் செய்து கொள்ளலாம். இப்படித்தான் மைக்ரோமேக்ஸ் லோகோவை போன்று சின்னத்தை பலரும் பிரின்ட் செய்து வைத்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும் இந்த சிறிய ஐடியா அதிக விலை கொண்ட கேஜட்ஸ்களை நிச்சயம் பாதுகாக்கும் என்று பலரும் கூறுகின்றனர். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் லோகோவை போன்ற சின்னம் பிரிண்ட் செய்யப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications