லெஹங்கா அணிந்து கொண்டு.. புஷ் அப் செய்த மணமகள்.. வைரலாகும் வீடியோ.. கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை போல
டெல்லி: திருமண அலங்காரத்தில் லெஹங்கா அணிந்த மணப்பெண் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் பேணலாம் என்பது நிதர்சனம். உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி உள்ளிட்டவைகளை செய்து வருவதால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் கட்டுக்குள் இருக்கும்.
அது போல் இதய நோயும் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சிகளையும் யோகாக்களையும் செய்தால் நல்ல பலன் உண்டு.

தொப்பை குறைக்க
உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும், இடுப்பு வலி, தண்டுவட வலி, மூட்டு வலி என ஒவ்வொரு பிரச்சினைக்கு உடற்பயிற்சி யோகாவில் தீர்வுகள் இருக்கின்றன. காலை வேளைகளில் சிலருக்கு நேரமின்மையால் மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

உடற்பயிற்சி
இதன் மூலம் புத்துணர்வு கிடைப்பதாகவும் உடற்பயிற்சி செய்வோர் தெரிவிக்கிறார்கள். தினமும் இதற்கென நேரம் ஒதுக்கி ஃபிட்னஸை விரும்புவோர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் அண்மையில் மணமகள் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. வட இந்திய திருமணம் போல் தெரிகிறது.

லெஹங்கா உடை
அதில் மணமகள் மிகவும் கனமாக உள்ள லெஹங்கா ஆடையை அணிந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நிறைய நகைகளையும் அணிந்து கொண்டிருக்கும் அந்த பெண் திடீரென புஷ் அப் எடுக்கும் காட்சிகளும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வரும் மணப்பெண்ணின் பெயர் ஆன்னா அரோரா. இவர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாடலிங் கலைஞர்
இவர் உணவியல் நிபுணராக இருந்து வருகிறார். மாடலிங்கும் செய்து வருகிறார். இவர் அடிக்கடி தனது ப்ரொபைல் பக்கத்தில் பிட்னஸ் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்ட அண்மை பதிவில்தான் சிவப்பு நிற லெஹங்காவில் புஷ் அப் செய்யும் காட்சிகள் இருந்தன. அலங்காரங்கள் முடிந்து மணமேடைக்கு செல்ல தயாராக இருந்த போது அவர் உடற்பயிற்சி செய்தார். இவரது வீடியோ 5.19 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் லட்சக்கணக்கில் வியூஸும் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications