IAF Surgical Strike Video: இப்படித்தான் தாக்குதல் நடந்ததா.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய வான்வழி தாக்குதல்கள் தொடர்பாக ஒரு வீடியோ உலா வருகிறது. இதன் உண்மைத்தன்மை இன்னும் தெரியவில்லை.
ஜம்மு- காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத அமைப்பின் தற்கொலை படை தாக்குதலில் கடந்த 14-ஆம் தேதி 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிரம் காட்டி வந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புகளின் முகாம்களின் மீது வெடிப்பொருள்களை வீசியதில் 200- 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்திருப்பர் என தெரிகிறது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து தற்போது சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன் உண்மைதன்மை தெரியவில்லை.
இந்திய விமான படை அதிகாரிகளோ மத்திய அரசோ செய்தியாளர்களை சந்தித்தால்தான் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை விளங்கும். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான வீடியோ 2 ஆண்டுகள் கழித்து 2018-இல் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications