முதலில் மாமனார், பிறகு மைத்துனர்.. பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கொடுமை.. கோர்ட்டில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 'நிக்கா ஹலாலா' நடைமுறைக்கு உள்ளாக வேண்டும் என்று இளம் பெண்ணை அவரது கணவர் குடும்பத்தார் வற்புறுத்துவதாக நீதிமன்றத்தில் இளம் பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த இளம் பெண்ணின் சகோதரி நீதிபதி அஜய் சிங் முன்னிலையில் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

A woman in Uttarpradesh forced to perform intercourse with her father in law

எனது சகோதரிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்பதற்காக, 2011 டிசம்பர் 15ம் தேதி அவரது கணவர் தலாக் செய்தார். ஆனால் எனது குடும்பத்தார் தொடர்ந்து கெஞ்சியதால், மீண்டும் எனது சகோதரியை மணம் முடித்துக்கொள்ள சம்மதித்தார். ஆனால் விவாகரத்து நடைமுறைப்படி, மற்றொரு ஆணுடன் அந்த பெண் 'ஹலாலா' செய்திருக்க வேண்டும் என்பதால், அனது தந்தையுடன் உறவு கொள்ள வற்புறுத்தினார். இதற்கு எனது சகோதரி ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், எனது கணவர் வீட்டார், எனது சகோதரிக்கு, மயக்க ஊசி கொடுத்து, மாமனாரை வைத்து, அவருடன் உறவு கொள்ளச் செய்தனர். இவ்வாறு 10 நாட்கள் எனது சகோதரி, அவரது மாமனாரால் உறவு கொள்ளப்பட்டார். இதன்பிறகு எனது சகோதரிக்கு, மாமனார், முத்தலாக் கொடுத்தார். இதையடுத்து மீண்டும் அவரது கணவரே சகோதரியை சேர்த்துக்கொண்டார்.

ஆனால், 2017ம் ஆண்டு ஜனவரி மீண்டும் எனது சகோதரியை அவர் கணவர் விவாகரத்து செய்தார். மீண்டும், அவரது சகோதரருடன் எனது சகோதரி ஹலாலா செய்து கொண்டால் வேண்டுமானால் மறுபடியும் திருமணம் செய்வதாக கூறுகிறார். எனவே நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பிப்ரவரி 15ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+