தண்ணீருடன் சோடியம் சேர்ந்தால் என்னாகும்..நீங்களே பாருங்க..இணையத்தை கலக்கும் வீடியோ
டெல்லி: தண்ணீரை தீ பிடித்து எரிய வைக்க முடியுமா? கொட்டும் மழையில், குடை பிடித்தபடி வந்த இளைஞர் தேங்கிய நீரில் எதையோ ஊற்றுகிறார்.. உடனே தண்ணீர் வெடித்து தீ பிடித்து எரிகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இப்போது எல்லாம் சமூக வலைதளங்களில் நம்ப முடியாத பல்வேறு வீடியோக்கள் தினமும் வெளியாகி வருகிறது. இப்படிப்பட்ட அசாதாரணமான வீடியோக்களைப் பார்க்கவே மக்களும் விரும்புகிறார்கள். சமீபத்தில் ஒரு வீடியோ அதிகம் பேரால் ஆச்சரியத்துடன் பகிரப்பபட்டு வருகிறது. அந்த வீடியோவில் என்ன இருந்தது என்பதை பார்ப்போம்.

தண்ணீர் தீப்பிடித்து வெடிக்கிறது.. இது எப்படி என்றே ஆச்சரியத்துடன் பலர் பார்க்கிறார்கள். மிகவும் வினோதமான இந்த வீடியோவை பார்த்த சிலர் அதிசயம் என்றே சொல்கிறார்கள். அதனால் தான் வீடியோ பெரிய அளவில் வேகமாக பரவி உள்ளது.
உண்மையில் அந்த வீடியோவில் என்ன இருந்தது? சின்ன அறிவியல் நிகழ்வு தான் நடந்திருப்பதாகவே நெட்டிசன்கள் பலரும் சொல்கிறார்கள். பலத்த மழை பெய்யும் போது, ஒரு சிறிய குட்டை அருகில் வரும் இளைஞர், வாட்டர் பாட்டிலில் இருந்து எதையோ சில துளிகள் அந்த பகுதியில் ஊற்றுகிறார் . தண்ணீரில் மர்மப் பொருளை இளைஞர் வீசிய பின்னர், தண்ணீர் வெடித்தது. தண்ணீரில் பட்டாசு வெடித்தது போல் தோன்றியது.
தொடர்ந்து அடர்த்தியான வெள்ளை புகையையும் எழும்பியது.இதுபற்றி நெட்டிசன்கள் கூறிய தகவலின் படி, தண்ணீரில் வீசப்பட்ட அறியப்படாத பொருளின் பெயர் சோடியம் என்ற தனிமம். தண்ணீரும் சோடியமும் சந்திக்கும் போது ஏற்படும் எதிர்வினை மிகவும் பயங்கரமாக இருக்கும் என்கிறது அறிவியல். இது சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுவை உருவாக்குகிறது என்றும் இது வெடிப்பை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள்.
Sodium+ Rain 💥 pic.twitter.com/BJccDJYdO7
— Science (@ScienceGuys_) October 30, 2023
15 வினாடிகள் இருக்கும் அந்த வீடியோ, "சோடியம்+ மழை" என தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தண்ணீர் வெடித்து சிதறுவபதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் இதைபற்றி கூறும் போது, சில பொருட்கள் சேரும் போது தீவிர எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்றார். சோடியத்தின் தன்மை இது.. அறிவியல் இப்படி தான் சில நேரம் வித்தியாசமான மாற்றங்களை நமக்கு காட்டும் என்றார். இதேபோன்று பலரும் சோடியம் தண்ணீர் இணைவது குறித்து ஆச்சரியமான பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோவை இதுவரை 1.2 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். சுமார் 2.1k மக்கள் ரிடுவிட் செய்துள்ளனர். பலரும் ஆச்சர்யத்துடன் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
சோடியம் குறித்த அறிவியலை பற்றி பார்க்கும் நாம்,இதில் உள்ள ஆபத்து குறித்தும் பார்க்க வேண்டும். அண்மையில் சோடியத்தை வீட்டில் வைத்து நடத்திய சோதனையின் காரணமாக பள்ளி மாணவர் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்தார். அந்த மாணவர் சோடியம் ஹைட்ராக்சைடு என்ற பொருளைப் பயன்படுத்தியதால் விபத்தில் சிக்கினார். சோடியம் குளோரைடை தொட்டுவிட்டு, அதை தண்ணீரில் கழுவ முயன்றார், அதன் காரணமாக அவரது தோல் எரிந்தது. தீக்காயம் காரணமாக சிறுவனுக்கு தோல் ஒட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications